முத்துமலை முருகன் கோயில், ஏத்தாப்பூர்
ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் ஏத்தாப்பூர் பகுதியின் புத்திரகவுண்டன்பாளையம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.[1] உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் உயரம் 111 அடி ஆகும். பீடம் 35 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 146 அடி உயரம் கொண்டதாக விளங்குகிறது.[2][3]
ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°39′24″N 78°29′08″E / 11.656545°N 78.485505°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சேலம் மாவட்டம் |
அமைவிடம்: | புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர் |
சட்டமன்றத் தொகுதி: | ஆத்தூர் - சேலம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 329 m (1,079 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | சுப்பிரமணியர் |
சிறப்புத் திருவிழாக்கள்: | சூரசம்காரம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 329 மீட்டர் உயரத்தில், 11°39′24″N 78°29′08″E / 11.656545°N 78.485505°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் மூலவர் சுப்பிரமணியர் ஆவார். ஆண்டுதோறும் சூரசம்காரம் நிகழ்வு இக்கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.[4][5] 2022ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஆறாம் நாள், இக்கோயிலின் கும்பாபிசேகம் நடைபெற்றது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ மாலை மலர் (2022-10-28). "ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் சத்ரு சம்கார யாகம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.
- ↑ Raghupati R. "உலகின் மிகப்பெரிய முருகன் சிலை.. 146 அடி உயரம்.. முத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் இன்று !!". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.
- ↑ "At 146 feet, Murugan statue in Tamil Nadu's Salem district is tallest in world". The Indian Express (in ஆங்கிலம்). 2022-04-07. பார்க்கப்பட்ட நாள் 2023-08-27.
- ↑ தந்தி டிவி (2022-10-27). "பிரமாண்டமான முருகன் சிலை...விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார விழா - பக்தர்கள் புடை சூழ உற்சவர் பவனி". www.thanthitv.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.
- ↑ "Lokal Tamil - தமிழ் செய்திகள்". tamil.getlokalapp.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.
- ↑ "சேலத்தில் உள்ள உலகின் உயரமான முருகன் சிலை ஏப்ரல் 6ல் கும்பாபிஷேகம்". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.