முத்தூறு திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஊர்.

இந்த ஊரில் நெல் விளைச்சல் அதிகம். வேளிர் குடி மக்கள் இவ்வூரில் வாழ்ந்துவந்தனர். இவர்கள் இந்த ஊரில் தொன்றுதொட்டு வாழ்ந்துவருவதால் ‘தொன்முதிர் வேளிர்’ எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

மிழலை நாட்டைக் கைப்பற்றிய தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மிழலை நாட்டை வென்றபின் முத்தூறு நாட்டையும் கைப்பற்றினான். மிழலை என்பது இக்காலத்தில் திருவீழிமிழலை என வழங்கப்படுகிறது. மாங்குடி கிழார் (மாங்குடி மருதனார்) என்னும் புலவர் இந்த வெற்றியைப் பாடியுள்ளார்.[1] சங்ககாலத்தில் வேளிர் முத்தூற்றுக் கூற்றத்துத் துவரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தனர். [2]

14ஆம் நூற்றாண்டு

தொகு
கருமாணிக்கன் என்னும் வள்ளல் முத்தூற்றுக் கூற்றத்து துவரை, கப்பலூர் பகுதியைப் பாண்டியனின் படைத்தலைவனாக விளங்கி ஆண்டுவந்தான். இந்த வள்ளல் மீது பாடப்பட்ட நூல் கப்பல் கோவை.

அடிக்குறிப்பு

தொகு
  1. ஓம்பா ஈகை மாவேள் எவ்வி
    புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக்
    கயலார் நாரை போர்வில் சேக்கும்
    பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
    குப்பை நெல்லின் முத்தூறு தந்த
    கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய - புற.நானூறு 24
  2. புறநானூறு 201
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தூறு&oldid=1157055" இலிருந்து மீள்விக்கப்பட்டது