முந்நூறு இராமாயணங்கள்: ஐந்து எடுத்துக்காட்டுகளும் மொழிபெயர்ப்பில் மூன்று சிந்தனைகளும்

முந்நூறு இராமாயணங்கள்: ஐந்து எடுத்துக்காட்டுகளும் மொழிபெயர்ப்பில் மூன்று சிந்தனைகளும் (Three Hundred Rāmāyaṇas: Five Examples and Three Thoughts on Translation) என்பது, பிப்ரவரி 1987 இல் பிட்சுபர்க் பல்கலைக்கழகத்தில் நாகரிகங்களின் ஒப்பீடு குறித்த மாநாட்டிற்காக இந்திய எழுத்தாளர் அ. கி. இராமானுசன் எழுதிய கட்டுரையாகும்.

2006-2007 ஆண்டு முதல் வரலாற்று இளங்கலைப் பட்டதாரிகளுக்கான தில்லி பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்தில் இந்தக் கட்டுரை இணைக்கப்பட்டது. அக்டோபர் 9, 2011 ஆம் தேதி அன்று, பல்கலைக்கழகத்தின் கல்விப் பேரவை அதன் அடுத்த கல்வி ஆண்டு முதல் இக்கட்டுரையை இளங்கலைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முடிவு செய்தது. பேரவையின் இந்த நடவடிக்கை பலரின் கவனத்தை ஈர்த்தது. பலர் இதை தேவையற்ற தணிக்கை நடவடிக்கையாகக் கருதினர்.

இராமானுசனின் ஆய்வறிக்கைதொகு

முந்நூறு இராமாயணங்கள் என்பது இராமாயணத்தின் வரலாற்று குறித்தும், இக்காப்பியம் இந்தியா மற்றும் ஆசியா முழுவதும், 2,500 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக, பரவியிருப்பது குறித்தும் சுருக்கமாகக் கூறுகிறது. பல்வேறு மொழிகள், சமூகங்கள், புவியியல் பகுதிகள், மதங்கள் மற்றும் வரலாற்று காலகட்டங்களில் இராமரின் கதை எவ்வாறு பல மாறுபாடுகளுக்கு உட்பட்டுள்ளது என்பதை இது நிரூபிக்க முயல்கிறது. இராமாயணத்தின் பதிவு செய்யப்பட்ட அனைத்துக் கூற்றுகள் மற்றும் மறுபரிசீலனைகள் அனைத்தையும் ஆவணப்படுத்த முயலவில்லை. மாறாக, அது பல்வேறு மொழிகள், பகுதிகள், மரபுகள் மற்றும் காலகட்டங்களில் இருந்து இராமாயணத்தின் ஐந்து குறிப்பிட்ட கூற்றுக்களை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது.

கட்டுரையின் தலைப்பில் உள்ள 300 இராமாயணங்களின் எண்ணிக்கை என்பது காமில் புல்கே [1] என்பவரின் படைப்பை அடிப்படையாகக் கொண்டது. இது உண்மையான எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இராமானுஜன், அதாவது வால்மீகி, கம்பன், ஜெயின், தாய் இராமக்கியன் மற்றும் தென்னிந்திய நாட்டுப்புறக் கதைகள் ஆகிய இராமாயணங்களின் ஐந்து வாசகங்களை மட்டுமே கருதுகிறார். இராமானுஜன், குறிப்பாக வழக்கமான சொற்களான "பதிப்புகள்" மற்றும் "மாறுபாடுகள்" ஆகியவற்றிற்கு மாறாக "சொல்லுதல்" (ஆங்கிலம்: telling) என்ற சொல்லை பயன்படுத்த விரும்புகிறார். கட்டுரையில் இராமானுஜனின் முக்கிய அவதானிப்புகளில் ஒன்று, அத்தகைய அசல் இராமாயணம் என்று எதுவும் இல்லை என்பதும், வால்மீகியின் இராமாயணம் சொல்வது பல இராமாயணக் கதைகளில் ஒன்றாகும் என்பதாகும்.

வெளியீடுதொகு

  • ஏ.கே. இராமானுஜன், 'முந்நூறு ராமாயணங்கள்: ஐந்து எடுத்துக்காட்டுகள் மற்றும் மொழிபெயர்ப்பு பற்றிய மூன்று சிந்தனைகள்', பல ராமாயணங்களில்: தெற்காசியாவில் ஒரு கதை பாரம்பரியத்தின் பன்முகத்தன்மை, பதிப்பு. பவுலா ரிச்மேன் (Berkeley: University of California Press, 1991), pp. 22–48.ISBN 9780520075894 . http://ark.cdlib.org/ark:/13030/ft3j49n8h7/ இல் கிடைக்கும்.
  • ஏ.கே. இராமானுஜன், 'த்ரீ ஹன்ட்ரட் இராமாயணங்கள்: ஃபைவ் எக்ஸாம்பிள்ஸ் அண்ட் த்ரீ த்ஹோட்ஸ் ஆன் டிரான்ஸ்லேஷன்', தி கலெக்டட் எஸ்ஸேஸ் ஆஃப் ஏ.கே. இராமானுஜனில் (ஆக்ஸ்போர்டு: ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், 2004), பக். 131-60, இங்கே கிடைக்கும்.

மேற்கோள்கள்தொகு

  1. Camille Bulcke (1950). Ramakatha: utpatti aur Vikas(The rama Story: Origin and Development) (Hindi). Prayag: Hindi Parishad Prakasan. 

மேலும் படிக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு