முந்நைட்ரோயெத்தில் ஆர்த்தோபார்மேட்டு

முந்நைட்ரோயெத்தில் ஆர்த்தோபார்மேட்டு (Trinitroethylorthoformate) என்பது C7H7N9O21 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட அருமையான வேதியியல் நிலைப்புத்தன்மை கொண்ட வெடிபொருளாகும். நீருறிஞ்சும் தன்மையற்ற இச்சேர்மத்தை டிரைநைட்ரோயெத்தில் ஆர்த்தோபார்மேட்டு என்றும் அழைக்கிறார்கள். இது நீரில் கரையாது, அமிலங்களுடன் வினைபுரியாது. நீரிய சோடியம் ஐதராக்சைடு கரைசலில் பார்மால்டிகைடு நெடியை வெளியிட்டு இச்சேர்மம் சிதைவடைகிறது. 190 ° செ வெப்பநிலையில் சிதைவடையத் தொடங்கினாலும் மு.நை.எ.ஆ.பா இன் வெடிப்புப் புள்ளி 229 ° செ வெப்பநிலை மற்றும் இதன் பருமஎண் 682லி/கி.கி ஆகும் [1]. மு.நை.எ.ஆ.பா வெடிக்கும்போது 6.3076 யூ/கி வெப்பம் வெளியாகிறது. முந்நைட்ரோயெத்தில் ஆர்த்தோ கார்பனேட்டின் கட்டமைப்பை மு.நை.எ.ஆ.பார்மேட்டின் கட்டமைப்பும் ஒத்துள்ளது. உயர் வெடிபொருட்கள் என வகைப்படுத்தப்படும் இவ்விரண்டு வெடிபொருட்களுமே அதிர்வு உணரிகளாகும். அதிர்வுகளைத் தவிர்க்கும் பொருட்டு இவை நைட்ரோ ஆல்க்கேன்களில் கரைத்து வைக்கப்படுகின்றன [1].

முந்நைட்ரோயெத்தில் ஆர்த்தோபார்மேட்டு
Trinitroethylorthoformate
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
டிரிசு(2,2,2-டிரைநைட்ரோயெத்தில்)ஆர்த்தோபார்மேட்டு
வேறு பெயர்கள்
  • மு.நை.எ.ஆ.பா
இனங்காட்டிகள்
14548-59-5
ChemSpider 123273
InChI
  • InChI=1S/C7H7N9O21/c17-8(18)5(9(19)20,10(21)22)1-35-4(36-2-6(11(23)24,12(25)26)13(27)28)37-3-7(14(29)30,15(31)32)16(33)34/h4H,1-3H2
    Key: NWWHXKXUBVOXEX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139780
  • C(C([N+](=O)[O-])([N+](=O)[O-])[N+](=O)[O-])OC(OCC([N+](=O)[O-])([N+](=O)[O-])[N+](=O)[O-])OCC([N+](=O)[O-])([N+](=O)[O-])[N+](=O)[O-]
பண்புகள்
C7H7N9O21
வாய்ப்பாட்டு எடை 553.174
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
உருகுநிலை 128 °C (262 °F; 401 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தொகுப்பு வினை

தொகு

FeCl3 வினையூக்கியுடன் முந்நைட்ரோயெத்தனால் சேர்மம் குளோரோஃபார்ம் உடன் சேர்க்கப்பட்டு முந்நைட்ரோயெத்தில் ஆர்த்தோபார்மேட்டு தயாரிக்கப்படுகிறது. .

 

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Liu, Jiping (2015). Liquid Explosives. Springer. pp. 5, 6, 8, 136, 309. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783662458471. பார்க்கப்பட்ட நாள் 26 March 2016.