முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி43

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி43 (The PSLV-C43 ) என்பது முனைய துணைக்கோள் ஏவுகல திட்டத்தின் 45 ஆவது ஏவுதல் ஆகும். இந்த ஏவுகலத்தில் சூரியவிணக்கப் பாதையில் படம்பிடிக்கக் கூடிய முதன்மை தாங்குசுமை கொண்ட அதிநிறமாலைக் கூறாக்க படமாக்கல் செயற்கைக்கோள் உட்பட 31 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.[1] ஆந்திரப் பிரதேசம்,ஸ்ரீஹரிக்கோட்டா, சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நவம்பர் 29, 2018 இல் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் இந்த ஏவுகலம் விண்ணில் ஏவப்பட்டது.[2]

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி43
திட்ட வகை31 செயற்கைக்கோள்களுடன்
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இணையதளம்ISRO website
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்முனைய துணைக்கோள் ஏவுகலம்
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
திட்ட ஆரம்பம்
ஏவுகலன்முனைய துணைக்கோள் ஏவுகலம்
ஏவலிடம்ஸ்ரீஹரிகோட்டா
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
----
Polar Satellite Launch Vehicle missions
← பிஎஸ்எல்வி-சி42 PSLV-C44 →

நோக்கம் தொகு

இந்த ஏவுகலத்துடன் அனுப்பப்படும் 31 செயற்கைக் கோள்களில் 1 செயற்கைக் கோள் இந்தியாவினுடையதும் மற்ற 30 செயற்கைக் கோள்கள் வெளிநாடுகளுடையதும் ஆகும். வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களில் ஆசுதிரேலியா, கனடா, கொலம்பியா, நெதர்லாந்து, இசுபெயின், பின்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் செயற்கைக் கோள்கள் தலா ஒன்றும், அமெரிக்காவின் 23 செயற்கைக் கோள்களும் அடங்கும்.[3]

இந்திய செயற்கைக் கோளின் சிறப்பம்சங்கள் தொகு

இந்திய செயற்கைக் கோளானது, இந்தியாவின் வேளாண்மை, வனப்பகுதி, கடலோரப் பகுதி, உள்நாட்டு நீர்நிலைகள், மண்ளம் மற்றும் இராணுவ உளவுப்பணிக்காக அதிநிறமாலைப்பிரிதிறன் கொண்ட பிம்பமாக்குதல் திறனைக் கொண்ட புவி கண்காணிப்பு செயற்கைக் கோளாகும்.

சான்றுகள் தொகு

  1. Prasanna, Laxmi (8 November 2018). "Isro lines up 3 rocket launches in two months". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/kochi/isro-lines-up-3-rocket-launches-in-two-months/articleshow/66538316.cms. 
  2. "ISRO launches PSLV-C43 rocket with HysIS and 30 foreign satellites from Sriharikota". https://www.thenewsminute.com/article/isro-launches-pslv-c43-rocket-hysis-and-30-foreign-satellites-sriharikota-92414. 
  3. "31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் !". ஆர்.ஜி.ஜெகதீஷ். புதிய தலைமுறை. நவம்பர் 27, 2018. பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2019.