முன்தண்டு (சுடுகலன் கூறு)
சுடுகலங்களில், முன்தண்டு (ஆங்கிலம்: forestock, forearm, handguard) என்பது, துப்பாக்கியின் வாங்கிக்கும் சன்னவாய்க்கும் இடையில் இருக்கும், ஓர் பகுதி ஆகும். சுடுகலனை ஒரே நிலையில் திடமாகப் பிடிக்க, இது பயன்படும். வழக்கமாக மரம் அல்லது கலப்பு பொருட்களால் இது செய்யப்படும். முன்தண்டை குழலோடு இணைத்து வைப்பதற்காக, முன்தண்டின் முன்பகுதிக்கு அருகே குழல்-பட்டை இடப்பட்டிருக்கும் (படத்தில் காண்க).
துப்பாக்கி சுடப்படுகையில், குழலில் இருந்து வெளிப்படும் வெப்பத்தில் இருந்து சுடுநரை பாதுகாக்க, சில முன்தண்டுகளில் வெப்பக்காப்பு பொறுத்தப் பட்டிருக்கும்.