முப்பதில் முப்பது

முப்பதில் முப்பது (30 by 30 ) என்பது 2030 ஆம் ஆண்டிற்குள் பூமியில் உள்ள நிலம் மற்றும் கடல் பகுதியில் 30 சதவீதத்தை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பதற்காக பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் முன்னெடுக்கும் ஓர் உலகளாவிய முயற்சியாகும். [1] [2] "இயற்கைக்கான உலகளாவிய ஒப்பந்தம்" என்ற 2019 ஆம் ஆண்டு வெளியான அறிவியல் கட்டுரை மூலம் இந்த இலக்கு முன்மொழியப்பட்டது. காலநிலை மாற்றத்தைத் தணிக்க விரிவாக்கப்பட்ட இயற்கை பாதுகாப்பு முயற்சிகளின் அவசியத்தை இம்முன்னெடுப்பு எடுத்துக்காட்டுகிறது. [3] [4] 2020 ஆம் ஆண்டு உயர் லட்சியக் கூட்டணியால் தொடங்கப்பட்ட இம்முயற்சியை ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சனவரி 2021 ஆம் மாதத்திற்குள் முயற்சிக்க ஒப்புக்கொண்டன.[5] இந்த எண்ணிக்கை இதே ஆண்டு அக்டோபரில் 70 ஆக விரிவடைந்தது மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய மாநாட்டு கூட்டத்தில் ஊக்குவிக்கப்பட்டது. [6]

செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு இம் முன்முயற்சிக்காக 5 மில்லியன் டாலர் நிதியுதவி " நமது கிரகத்தின் பாதுகாப்புக்காக" அறிவிக்கப்பட்டது. [7]

இந்த முயற்சி பூர்வீக உரிமைகள் தொடர்பான சர்ச்சையை உருவாக்கியுள்ளது [1]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "As COP15 approaches, ’30 by 30’ becomes a conservation battleground" (en-US) (2021-08-26).
  2. "30 by 30: why humanity should protect 30 per cent of the ocean by 2030" (en-US).
  3. Dinerstein, E.; Vynne, C.; Sala, E.; Joshi, A. R.; Fernando, S.; Lovejoy, T. E.; Mayorga, J.; Olson, D. et al.. "A Global Deal For Nature: Guiding principles, milestones, and targets". Science Advances 5 (4): eaaw2869. doi:10.1126/sciadv.aaw2869. பப்மெட்:31016243. பப்மெட் சென்ட்ரல்:PMC6474764. https://www.science.org/doi/10.1126/sciadv.aaw2869. 
  4. Jones, Benji (2021-04-12). "The hottest number in conservation is rooted more in politics than science" (en).
  5. Foundation, Thomson Reuters. "Drive to protect 30% of planet by 2030 grows to 50 nations".
  6. "High Ambition Coalition for Nature and People" (en-US).
  7. "$5B conservation plan offers new approach, but faces hurdles" (en) (2021-09-28).
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பதில்_முப்பது&oldid=3304177" இருந்து மீள்விக்கப்பட்டது