முப்பிரி எக்சு நோய்க்குறி

முப்பிரி எக்சு நோய்க்குறி (Triple X syndrome) அல்லது முப்படி எக்சு நோய்த்தொகை என்பது பெண்களின் ஒவ்வொரு உயிரணுக்களிலும் ஒரு எக்சு நிறப்புரி அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது.[1] இதனால் சராசரியை விட சற்று உயரமாக வளர்ச்சி அடைவர்[1] மற்ற பெண்களுக்கும் இவர்களுக்கும் உடல் ரீதியாக வேறு எந்த வேருபாடுகளும் இருக்காது.கருத்தரிப்பிலும் எந்த பிரச்சினைகளும் வராது.[1] ஆனால் சில சமயங்களில் கற்றல் குறைபாடுகள் , தசைகளின் குறைந்த அளவு சுருக்கம் அல்லது சிறுநீரகப் பிரச்சினைகள் வரலாம்.[1]

முப்பிரி எக்சு நோய்க்குறி பல காரணங்களால் ஏற்படுகிறது.[1] இது மரபுவழியாக பரவும் தன்மை கொண்டது அல்ல.[1] உயிரணு மரபியல் சோதனை மூலம் இதனை கண்டறியலாம்.[2]

பேசுவதற்கான சிகிச்சை, உடல் ரீதியிலான சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குதல் போன்ற பல சிகிச்சைகள் உள்ளன.[2] 1,000 பெண்களில் ஒருவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.[3] இதில் 90 விழுக்காடு பெண்கள் அறிகுறி இல்லாததால் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.[3] இந்த நோய் 1959 ஆம் ஆண்டில் தான் கண்டறியப்பட்டது.[4]

அறிகுறிகள்

தொகு

முப்பிரி எக்சு நோய்க்குறி பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிய இயலாததால் இந்த நோயின் தாக்கங்களை வகைப்படுத்த இயலவில்லை.

உடல் ரீதியிலான் அறிகுறிகள்

தொகு

சராசரியை விட சற்று உயரமான வளர்ச்சி, கண் இமை மடிதல், தசைகள் வலிமையின்மை, ஐந்தாவது விரல் நான்காவது விரலைநோக்கி மடிதல் ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.[3] தலை சிறியதாக இருக்கும்.[5] இயல்பாக மற்ற பெண்களின் வளர்ச்சியை விட சற்று அதிகமான உயரம் கொண்டிருப்பதே பொதுவான அறிகுறியாகும்.

உளவியல்

தொகு

முப்பிரி எக்சு நோய்க்குறியினால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொழி வளர்ச்சியில் காலதாமதம் ஏற்படலாம்.[6] மேலும் இதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் சராசரி நுண்ணறிவு எண் 20 க்கும் கீழாக இருக்கும்.[6] தன் மதிப்பின்மை, பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்றவைகள் ஏற்படும்.[3][6]

சிகிச்சை

தொகு

நிலையான, சுகாதாரமான வீட்டுச் சூழ்நிலையில் இருந்தால் முன்னேற்றம் ஏற்படலாம்.[6]

கொள்ளை நோயியல்

தொகு

1,000 பெண்களில் ஒருவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.[3] மேலும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு நாளில் பிறக்கும் 10 பெண்களில் ஐந்து பெண்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.[7]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "triple X syndrome". GHR. June 2014. Archived from the original on 27 July 2016. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.
  2. 2.0 2.1 "47 XXX syndrome". GARD. 16 March 2016. Archived from the original on 5 November 2016. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Tartaglia, NR; Howell, S; Sutherland, A; Wilson, R; Wilson, L (11 May 2010). "A review of trisomy X (47,XXX).". Orphanet journal of rare diseases 5: 8. doi:10.1186/1750-1172-5-8. பப்மெட்:20459843. 
  4. Wright, David (2011). Downs: The history of a disability (in ஆங்கிலம்). OUP Oxford. p. 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780191619786. Archived from the original on 2017-09-11.
  5. "Triple X syndrome". Mayo Clinic. August 17, 2010. Archived from the original on 2012-02-28.
  6. 6.0 6.1 6.2 6.3 Otter, M; Schrander-Stumpel, CT; Curfs, LM (March 2010). "Triple X syndrome: a review of the literature.". European Journal of Human Genetics 18 (3): 265–71. doi:10.1038/ejhg.2009.109. பப்மெட்:19568271. 
  7. National Library of Medicine (2007). "Genetics Home Reference: Triple X syndrome". Archived from the original on 2007-03-12. பார்க்கப்பட்ட நாள் 2007-03-22.