நுண்ணறிவு எண்

நுண்ணறிவு ஈவு அல்லது நுண்ணறிவு எண் (Intelligence quotient - IQ) என்பது மனித நுண்ணறிவை மதிப்பிடுவதற்காக வருவிக்கப்பட்ட சீர்தரப்படுத்தப்பட்ட தேர்வுகளின் தொகுப்பிலிருந்து பெறப்பட்ட மொத்த மதிப்பாகும்.[1] இதன் சுருக்க வடிவமான ஐ. கியூ (IQ) என்பது செருமானிய உளவியலாளர் வில்லியம் இசுடெர்ன் என்பவரால் உருவாக்கப்பட்டதாகும். இவர் பிறரெசுலாவ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது மனித நுண்ணறிவை மதிப்பிடுவதற்காக தான் பயன்படுத்திய சோதனை முறை ஒன்றை 1912 ஆம் ஆண்டு வெளியான தனது நூலொன்றில் பரிந்துரைத்திருந்தார்.[2]

வரலாற்றுரீதியாக, நுண்ணறிவு ஈவு என்பது ஒருவரின் மன வயதினை (ஆண்டு மற்றும் மாதங்களில்) ஒரு நுண்ணறிவுத் தேர்வினை நடத்தி தீர்மானித்து அதனை அதே நபரின் கால வயதினால் (ஆண்டு மற்றும் மாதங்களில்) வகுப்பதால் கிடைக்கும் மதிப்பு ஆகும். இவ்வாறு கிடைக்கும் மதிப்பினை (ஈவு) 100-ஆல் பெருக்கக் கிடைப்பது நுண்ணறிவு ஈவின் மதிப்பாகும்.[3] நவீன நுண்ணறிவு ஈவுச் சோதனைகளில், கிடைக்கும் மதிப்பானது 100-ஐச் சராசரியாகவும் திட்ட விலக்கம் 15-ஐயும் கொண்ட ஒரு இயல்நிலைப் பரவலாக மாற்றப்படுகிறது. இந்த முடிவுகளின்படி மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேரின் நுண்ணறிவு ஈவு 85-இற்கும் 115-இற்கும் இடைப்பட்டதாக இருக்கிறது. 2 விழுக்காட்டினருக்கு 130-இற்கு மேலாகவோ 70-இற்குக் கீழாகவோ அமைகிறது.

நுண்ணறிவுச் சோதனைகளின் மதிப்புகள் ஒருவரின் நுண்ணறிவை மதிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டாக, தொலைவு, நிறை போலன்றி, நுண்ணறிவின் ஒரு உறுதியான அளவீட்டை "நுண்ணறிவு" என்ற கருத்தியலின் கட்வுலனாகாத் தன்மையின் காரணமாக அடைய முடியாது.[4] நுண்ணறிவு ஈவின் மதிப்புகளானவை எடுத்துக்கொள்ளும் உணவின் சத்துக்கூறுகள்,[5][6][7] பெற்றோரின் சமூகபொருளாதாரத் தகுதிநிலை,[8][9] நோய்த்தாக்கம், இறப்பு வீதம், [10][11] பெற்றோரின் சமூகத் தகுதிநிலை,[12] மற்றும் பேறுகாலச் சூழல் ஆகியவற்றைச் சார்ந்துள்ளதாக அறியப்படுகிறது.[13] நுண்ணறிவு ஈவிற்கும் மரபுபேற்றுத்திறனுக்கும் உள்ள தொடர்பானது ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக அலசி ஆராயப்பட்டு வருகிறது. இருப்பினும், மரபுவழியாக நுண்ணறிவினை அடைதல் என்பதன் வழிமுறையின் முக்கியத்துவமானது விவாதத்திற்குரிய பொருளாகவே இருந்து வருகிறது.[14][15][16]

நுண்ணறிவு ஈவு மதிப்புகள் கல்வியில் வாய்ப்பினை வழிங்குவதற்கும் ஒருவரின் அறிவுசார் திறனையும் வேலை தேடுவோரின் திறனை மதிப்பிடுவதற்கும் பயன்படுகிறது. ஆய்வுச் சூழலில், இந்த மதிப்பானது வேலைத்திறன் மற்றும் வருவாய் ஈட்டுதலின் வருவதுரைப்பவையாக ஆய்விடப்பட்டு வருகிறது. மக்கள்தொகையில் உள அளவியல் நுண்ணறிவின் பரவல் மற்றும் அதற்கும் பிற மாறிகளுக்கும் இடையிலான தொடர்புகளையும் ஆய்வு செய்ய இவை பயன்படுத்தப்படுகின்றன.

வரலாறு

தொகு

நுண்ணறிவு ஈவுச் சோதனையின் முன்னோடிகள்

தொகு

வரலாற்றுரீதியாக, நுண்ணறிவு ஈவிற்கான சோதனைகள் வருவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, மக்களை அவர்களின் அன்றாட வாழ்வில் வெளிப்படுத்தும் நடத்தைகளை உற்றுநோக்கி நுண்ணறிவின் அடிப்படையில் வகைப்படுத்தும் முயற்சிகளானவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதன்மையாக நுண்ணறிவு ஈவுச் சோதனை மதிப்பெண்களின் அடிப்படையில் வகைப்படுத்தல்களை சரிபார்ப்பதற்கு அத்தகைய பிற நடத்தை கண்காணிப்புகள் இன்னும் முக்கியமானவை. சோதனை அறைக்கு வெளியேயான நடத்தைகளை உற்றுநோக்கலின் அடிப்படையிலான வகைப்படுத்தல், நுண்ணறிவு ஈவுச் சோதனைகளின் அடிப்படையிலான வகைப்படுத்தல் இவை இரண்டுமே பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட முறையில் நுண்ணறிவின் வரையறையைப் பொறுத்தும் வகைப்படுத்தும் செயல்முறையின் பிழை மதிப்பீடு மற்றும் நம்பகத்தன்மையைப் பொறுத்தும் சார்ந்துள்ளன.

ஆங்கிலப் புள்ளியியல் நிபுணர் பிரான்சிஸ் கால்டன் (1822-1911) ஒரு நபரின் அறிவுத்திறனை மதிப்பிடுவதற்கான தரப்படுத்தப்பட்ட சோதனையை உருவாக்கும் முதல் முயற்சியை மேற்கொண்டார். இவர் உள அளவியலின் முன்னோடியும்  மனித பன்முகத்தன்மை மற்றும் மனித பண்புகளின் மரபியல் ஆய்வுக்கு புள்ளிவிவர முறைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை முதன்முதலாகக் கையாண்டவரும் ஆவார். இவர் நுண்ணறிவானது பெருமளவு மரபியல் சார்ந்த ஒரு விளைபொருள் என நம்பினார். இதன் மூலமாக இவர் மரபணுவைக் குறிக்கவில்லை. இருப்பினும் இவர் மெண்டலிற்கு முன்னதாகவே மரபியல்ரீதியாகப் பெறப்படும் இத்தகைய விளைவுகளைக் குறித்து பல கோட்பாடுகளை உருவாக்கியிருந்தார்.[17][18][19] நுண்ணறிவிற்கும் அனிச்சைச் செயல்கள், தசைப்பிடிப்பு மற்றும் தலை அளவு போன்ற பிற கவனிக்கக்கூடிய பண்புகளுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்று அவர் அனுமானித்தார்.[20] Hஇவர் 1882-ஆம் ஆண்டில் உலகின் முதல் மனநல சோதனை மையத்தை நிறுவினார், மேலும் இவர் 1883-ஆம் ஆண்டில் "மனித செயல்திறம் மற்றும் அதன் வளர்ச்சி பற்றிய விசாரணைகள்" என்ற அறிக்கையை வெளியிட்டார், அதில் இவர் தனது கோட்பாடுகளை முன்மொழிந்தார்.பலவிதமான இயற்பிய மாறிகள் பற்றிய தரவுகளைச் சேகரித்த பிறகு, இவரால் அத்தகைய தொடர்பைக் காட்ட முடியவில்லை, இறுதியில் இவர் இந்த ஆராய்ச்சியைக் கைவிட்டார்.[21]

 
இசுடான்போர்டு பினெட் சோதனை, பினெட்-சைமன் சோதனை ஆகியவற்றின் இணை உருவாக்குநர், உளவியலாளர் ஆல்பிரட் பினே

பிரெஞ்சு உளவியலாளர் ஆல்ஃபிரட் பினெட், விக்டர் என்றி மற்றும் தியோடர் சைமன் ஆகியோருடன் சேர்ந்து, 1905 ஆம் ஆண்டில் பினெட்-சைமன் சோதனையை வெளியிட்டபோது சிறந்த வெற்றியைப் பெற்றார், இது வாய்மொழித் திறன்களை மையமாகக் கொண்டது. இது பள்ளிக் குழந்தைகளில் "மனவளர்ச்சி குன்றுதல்" என்ற பிறழ்ச்சியை அடையாளம் காணும் நோக்கம் கொண்டது, ஆனால் மனநல மருத்துவர்களின் “இந்தக் குழந்தைகள் "நோய்வாய்ப்பட்டவர்கள்" எனவே பள்ளியிலிருந்து நீக்கப்பட்டு புகலிடங்களில் பராமரிக்கப்பட வேண்டும்” கூற்றுகளுக்குக் குறிப்பிட்ட முரணாக இவை அமைந்தன.[22] பினெட்-சைமன் அளவுகோலில் உள்ள மதிப்பெண் குழந்தையின் மன வயதை வெளிப்படுத்தும். எடுத்துக்காட்டாக, ஆறு வயதுக் குழந்தை வழக்கமாக ஆறு வயதுக் குழந்தைகளால் கடந்து செல்லும் அனைத்துப் பணிகளையும் கடந்து செல்ல இயலும் - ஆனால், அதற்கு மேல் எதுவும் இல்லை - இவரது கருத்துப்படி காலவரிசை வயது, 6.0 உடன் பொருந்தக்கூடிய ஒரு மன வயது இருக்கும். (ஃபான்சர், 1985). நுண்ணறிவு பன்முகத்தன்மை கொண்டது என்று பினெட் நினைத்தார், ஆனால், இந்தக் கருத்தியல் நடைமுறைத் தீர்வுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

பினெட்டின் பார்வையில், இவரது அளவுகோலில் வரம்புகள் இருந்தன, மேலும் இவர் நுண்ணறிவின் குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மையைச் சுட்டிக்காட்டி எண்ணியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு மாறாக தரத்தைப் பயன்படுத்தி அதைப் படிக்க வேண்டியதன் அவசியத்தை இவர் வலியுறுத்தினார் (ஒயிட்., 2000). அமெரிக்க உளவியலாளர் என்றி எச். கட்டார்டு ஒரு மொழிபெயர்ப்பு அறிக்கையை 1910 ஆம் ஆண்டில் வெளியிட்டார். அமெரிக்க உளவியலாளரான லூயி டெர்மன் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பினெட்-சைமன் அளவுகோலை திருத்தி அமைத்தார். இது இசுடான்போர்டு பினெட் நுண்ணறிவுத் தர அளவுகோல் (1916) என்று பெயரிடப்பட்டது. இத்தர அளவுகோல் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பல பதின்ம ஆண்டுகளுக்குப் புகழ் பெற்ற சோதனையாக இருந்து வந்தது.[23][24][25]

மேற்கோள்கள்

தொகு
  1. Braaten, Ellen B.; Norman, Dennis (1 November 2006). "Intelligence (IQ) Testing". Pediatrics in Review 27 (11): 403–408. doi:10.1542/pir.27-11-403. பன்னாட்டுத் தர தொடர் எண்:0191-9601. பப்மெட்:17079505. https://pedsinreview.aappublications.org/content/27/11/403. பார்த்த நாள்: 22 January 2020. 
  2. Stern 1914, ப. 70–84 (1914 English translation); pp. 48–58 (1912 original German edition).
  3. "Glossary of Important Assessment and Measurement Terms".. (2016). Philadelphia, PA: National Council on Measurement in Education. 
  4. Haier, Richard (28 December 2016). The Neuroscience of Intelligence. Cambridge University Press. pp. 18–19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107461437.
  5. Cusick, Sarah E.; Georgieff, Michael K. (1 August 2017). "The Role of Nutrition in Brain Development: The Golden Opportunity of the 'First 1000 Days'". The Journal of Pediatrics 175: 16–21. doi:10.1016/j.jpeds.2016.05.013. பப்மெட்:27266965. 
  6. Saloojee, Haroon; Pettifor, John M (15 December 2001). "Iron deficiency and impaired child development". British Medical Journal 323 (7326): 1377–1378. doi:10.1136/bmj.323.7326.1377. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-8138. பப்மெட்:11744547. 
  7. Qian, Ming; Wang, Dong; Watkins, William E.; Gebski, Val; Yan, Yu Qin; Li, Mu; Chen, Zu Pei (2005). "The effects of iodine on intelligence in children: a meta-analysis of studies conducted in China". Asia Pacific Journal of Clinical Nutrition 14 (1): 32–42. பன்னாட்டுத் தர தொடர் எண்:0964-7058. பப்மெட்:15734706. https://pubmed.ncbi.nlm.nih.gov/15734706/. 
  8. Poh, Bee Koon; Lee, Shoo Thien; Yeo, Giin Shang; Tang, Kean Choon; Noor Afifah, Ab Rahim; Siti Hanisa, Awal; Parikh, Panam; Wong, Jyh Eiin et al. (13 June 2019). "Low socioeconomic status and severe obesity are linked to poor cognitive performance in Malaysian children". BMC Public Health 19 (Suppl 4): 541. doi:10.1186/s12889-019-6856-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-2458. பப்மெட்:31196019. 
  9. Galván, Marcos; Uauy, Ricardo; Corvalán, Camila; López-Rodríguez, Guadalupe; Kain, Juliana (September 2013). "Determinants of cognitive development of low SES children in Chile: a post-transitional country with rising childhood obesity rates". Maternal and Child Health Journal 17 (7): 1243–1251. doi:10.1007/s10995-012-1121-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-6628. பப்மெட்:22915146. https://pubmed.ncbi.nlm.nih.gov/22915146/. 
  10. Markus Jokela; G. David Batty; Ian J. Deary; Catharine R. Gale; Mika Kivimäki (2009). "Low Childhood IQ and Early Adult Mortality: The Role of Explanatory Factors in the 1958 British Birth Cohort". Pediatrics 124 (3): e380 – e388. doi:10.1542/peds.2009-0334. பப்மெட்:19706576. 
  11. Deary & Batty 2007.
  12. Neisser et al. 1995.
  13. Ronfani, Luca; Vecchi Brumatti, Liza; Mariuz, Marika; Tognin, Veronica (2015). "The Complex Interaction between Home Environment, Socioeconomic Status, Maternal IQ and Early Child Neurocognitive Development: A Multivariate Analysis of Data Collected in a Newborn Cohort Study". PLOS ONE 10 (5): e0127052. doi:10.1371/journal.pone.0127052. பப்மெட்:25996934. Bibcode: 2015PLoSO..1027052R. 
  14. Johnson, Wendy; Turkheimer, Eric; Gottesman, Irving I.; Bouchard, Thomas J. (August 2009). "Beyond Heritability". Current Directions in Psychological Science 18 (4): 217–220. doi:10.1111/j.1467-8721.2009.01639.x. பப்மெட்:20625474. 
  15. Turkheimer 2008.
  16. Devlin, B.; Daniels, Michael; Kathryn Roeder (1997). "The heritability of IQ". Nature 388 (6641): 468–71. doi:10.1038/41319. பப்மெட்:9242404. Bibcode: 1997Natur.388..468D. 
  17. Bulmer, M (1999). "The development of Francis Galton's ideas on the mechanism of heredity". Journal of the History of Biology 32 (3): 263–292. doi:10.1023/a:1004608217247. பப்மெட்:11624207. 
  18. Cowan, R. S. (1972). "Francis Galton's contribution to genetics". Journal of the History of Biology 5 (2): 389–412. doi:10.1007/bf00346665. பப்மெட்:11610126. 
  19. Burbridge, D (2001). "Francis Galton on twins, heredity and social class". British Journal for the History of Science 34 (3): 323–340. doi:10.1017/s0007087401004332. பப்மெட்:11700679. 
  20. Fancher, R. E. (1983). "Biographical origins of Francis Galton's psychology". Isis 74 (2): 227–233. doi:10.1086/353245. பப்மெட்:6347965. 
  21. Gillham, Nicholas W. (2001). "Sir Francis Galton and the birth of eugenics". Annual Review of Genetics 35 (1): 83–101. doi:10.1146/annurev.genet.35.102401.090055. பப்மெட்:11700278. 
  22. Nicolas, S.; Andrieu, B.; Croizet, J.-C.; Sanitioso, R. B.; Burman, J. T. (2013). "Sick? Or slow? On the origins of intelligence as a psychological object". Intelligence 41 (5): 699–711. doi:10.1016/j.intell.2013.08.006.  (This is an திறந்த அணுகல் article, made freely available by எல்செவியர்.)
  23. Terman et al. 1915.
  24. Wallin, J. E. W. (1911). "The new clinical psychology and the psycho-clinicist". Journal of Educational Psychology 2 (3): 121–32. doi:10.1037/h0075544. https://zenodo.org/record/1429171. 
  25. Richardson, John T. E. (2003). "Howard Andrew Knox and the origins of performance testing on Ellis Island, 1912-1916". History of Psychology 6 (2): 143–70. doi:10.1037/1093-4510.6.2.143. பப்மெட்:12822554. 

நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணறிவு_எண்&oldid=4032873" இலிருந்து மீள்விக்கப்பட்டது