முப்பீனைல்மெத்தேன்தயோல்
முப்பீனைல்மெத்தேன்தயோல் (Triphenylmethanethiol) (C6H5)3CSH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம கந்தகச் சேர்மமான இது முப்பீனைல்பெத்தில் சேர்மத்தின் தயோல் வழிப்பெறுதியாகப் பெறப்படுகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டிரைபீனைல்மெத்தேன் தயோல் | |
வேறு பெயர்கள்
டிரைடைல் மெர்காப்டன்
| |
இனங்காட்டிகள் | |
3695-77-0 | |
ChemSpider | 69703 |
EC number | 223-020-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 77281 |
| |
பண்புகள் | |
C19H16S | |
வாய்ப்பாட்டு எடை | 276.40 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறத் திண்மம் |
உருகுநிலை | 103–107 °C (217–225 °F; 376–380 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H332 | |
P261, P264, P271, P280, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
முப்பீனைல்மெத்தேன்தயோல் சேர்மமானது குறைந்த பருமன் ஒப்புமைகளை விட நிலைப்புத்தன்மை கொண்ட பல அசாதாரண வழிப்பெறுதிகளை உருவாக்குகிறது. (C6H5)3CSClஎன்ற மூலக்கூற்றால் விவரிக்கப்படும் சல்பீனைல் குளோரைடு தயோல் சேர்மத்திலிருந்து பெறப்படுகிறது. உடன் சல்பியூரைல் குளோரைடும் உருவாகிறது. இது அமோனியாவுடன் வினைபுரிந்து (C6H5)3CSNH2என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் சல்பீனமைடை உருவாக்குகிறது. தயோல் நைட்ரசு அமிலத்துடன் வினைபுரிந்து (C6H5)3CSNO என்ற மூலக்கூற்றால் விவரிக்கப்படும் பச்சை நிறங்கொண்ட நைட்ரசோதயோல் சேர்மத்தைக் கொடுக்கிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Triphenylmethanethiol". Encyclopedia of Reagents for Organic Synthesis. (2009). DOI:10.1002/047084289X.rn01030.
- ↑ Senning, Alexander (1991). "Triphenylmethanethiol and triphenylmethanesulfenylchloride". Sulfur Letters 12 (4–5): 183–192.
- ↑ Arulsamy, N.; Bohle, D. S.; Butt, J. A.; Irvine, G. J.; Jordan, P. A.; Sagan, E. (1999). "Interrelationships between conformational dynamics and the redox chemistry of S-nitrosothiols". Journal of the American Chemical Society 121 (30): 7115–7123. doi:10.1021/ja9901314.