முப்பீனைல்வெள்ளீய சேர்மங்கள்

மூன்று பீனைல் தொகுதிகளுடன் ஒரு வெள்ளீயம் அணு பிணைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.

முப்பீனைல்வெள்ளீய சேர்மங்கள் (Triphenyltin compounds) என்பவை (C6H5)3SnX என்ற பொதுவாய்ப்பாட்டைக் கொண்ட கரிமவெள்ளீய சேர்மங்களாகும். இவற்றை டிரைபீனைல்டின் சேர்மங்கள் என்று அழைக்கிறார்கள். இவ்வகை சேர்மங்களில் முப்பீனைல்வெள்ளீயம் தொகுதி (C6H5)3Sn, அல்லது Ph3Sn இடம்பெற்றிருக்கும். மூன்று பீனைல் தொகுதிகளுடன் ஒரு வெள்ளீயம் அணு பிணைக்கப்பட்டிருப்பதை முப்பீனைல்வெள்ளீயம் தொகுதி என்கிறோம்.

1960 களில் முப்பீனைல்வெள்ளீய சேர்மங்களை முப்பியூட்டைல்வெள்ளீய சேர்மங்களுடன் சேர்த்து பாசிக்கொல்லிகளாகவும், மெல்லுடலிக்கொல்லிகளாகவும் விரிவாகப் பயன்படுத்தினர் [1]. இவ்விருவகை சேர்மங்களுமே தொடர்ச்சியான கரிம மாசுபடுத்திகள் என்பதால் உலகாய அளவிலான பயன்பாட்டில் இவை இல்லை [2]. கரிமத் தொகுப்பு வினைகளில் தனி உறுப்புகளை உருவாக்கவும் அல்லது கார்பன்-ஆக்சிசன் பிணைப்புகளை வெட்டவும் இதை பயன்படுத்துகிறார்கள் [3].

மேற்கோள்கள் தொகு

  1. "Concise International Chemical Assessment Document 13: Triphenyltin Compounds". International Programme on Chemical Safety. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  2. "Triphenyltin compounds". Environment Agency. Archived from the original on 2010-04-08. பார்க்கப்பட்ட நாள் 2010-04-08.
  3. Clive, D. L. J. (2004). "Triphenylstannane". in Paquette, L. e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. New York: J. Wiley & Sons. doi:10.1002/047084289X.rt390.