மும்தாஜ் எம். காசி

மும்தாஜ் எனவும் மக்சூத் அகமது காசி எனவும் மேலும் மும்தாஜ் எம் காசி (Mumtaz M. Kazi) எனவும் பிரபலமாக அழைக்கப்படும் இவர், ஒரு இந்திய தொடர்வண்டி பொறியியலாளர் ஆவார். இவர் டீசல் இயந்திர தொடர் வண்டியை ஓட்டிய முதல் இந்தியப் பெண் என்றும் கருதப்படுகிறார் [1] உண்மையில், இவர் ஆசியாவின் முதல் பெண் லோகோமோட்டிவ் ஓட்டுநராவார். அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி 2017 மார்ச் மாதம் அனைத்துலக பெண்கள் நாள் அன்று இவருக்கு மதிப்புமிக்க நாரி சக்தி விருது வழங்கினார். [2]

மும்தாஜ் எம். காசி
2017இல் காசி
பிறப்புமும்பை,  இந்தியா
அறியப்படுவதுமுதல் ஆசிய பெண் லோகோமோட்டிவ் இரயில் ஓட்டுநர்
வாழ்க்கைத்
துணை
மக்சூத் காசி
விருதுகள்2017 நாரி சக்தி விருது

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

மகாராட்டிரா மாநிலத்தின் வணிக தலைநகரான மும்பையில் மரபுவழி முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். இவர் 1989 இல் சாண்டாகுரூசில் உள்ள சேத் ஆனந்திலால் ரோடர் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். [3] இவரது தந்தை அல்லராகு இஸ்மாயில் கத்வாலா இந்திய இரயில்வே பணியாளராக பணியாற்றினார். மும்தாஜ் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி முழுநேர தொடர் வண்டி ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். இருப்பினும் ஆரம்பத்தில் இரயில்வே துறையில் சேர இவரது தந்தை இவரை அனுமதிக்கவில்லை. மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தை பயில இவரிடம் சொன்னார். ஆனால் பின்னர் இவர் தனது தந்தையை சமாதானப்படுத்தினார். [4]

தொழில் தொகு

1989இல் பட்டம் பெற்ற பிறகு, அதே ஆண்டில் இவர் என்ஜின் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்தார். [5] 1991ஆம் ஆண்டில் தனது 20வது வயதில் தொடர் வண்டியை ஓட்டத் தொடங்கினார். இந்த சாதனைக்காக 1995ஆம் ஆண்டில் லிம்கா சாதனைகள் புத்தகத்தால் முதல் ஆசிய பெண் லோகோமோட்டிவ் ஓட்டுநராக அங்கீகரிக்கப்பட்டார். [3] [6]

இந்தியாவின் முதல் மற்றும் மிகவும் நெரிசலான இரயில் பாதையான சத்ரபதி சிவாஜி மகாராஜ் சந்திப்பு - தானே பிரிவு வழியாக உள்ளூர் இரயில்களை இவர் இயக்குகிறார். [7]

பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து ஆண்டுதோறும் இந்தியாவில் வழங்கப்படும் நாரி சக்தி விருதைப் பெற்றார். [8] [9] இவர் 2015ஆம் ஆண்டில் இந்திய இரயில்வேயில் இருந்து இரயில்வே பொது மேலாளர் விருதையும் பெற்றார்.

சொந்த வாழ்க்கை தொகு

இவர் மின்சார பொறியியலாளர் மக்சூத் காசி என்பவரை மணந்தார். [5]

மேற்கோள்கள் தொகு

  1. divyabaliyan99. "Meet Mumtaz M. Kazi, Asia's first lady Diesel locomotive driver -" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-11-03. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. "Nari Shakti Puraskar awardees full list". Best Current Affairs. 9 March 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-04-18.
  3. 3.0 3.1 Reddy, drusenireddymallu_221 (2017-06-28). "Mumtaz M Kazi Asian Woman Train Driver | Indian Railway Train Pilot". Diary Store (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  4. "India's first 'motor-woman' lives her dream on the railway tracks". The Indian Express (in Indian English). 2017-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  5. 5.0 5.1 "Asia's first woman to drive a diesel train is an Indian". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  7. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  8. "Mumtaz - Asia's First Woman Diesel Engine Driver, Gets 'Nari Shakti Puraskar' By The President". indiatimes.com (in ஆங்கிலம்). 2017-03-09. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  9. Taneja, Richa (2017-03-08). "Mumbai's Mumtaz, Asia's First Woman Diesel Engine Driver, Gets "Nari Shakti Puraskar"". Everylifecounts.NDTV.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-11-03. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்தாஜ்_எம்._காசி&oldid=3576171" இலிருந்து மீள்விக்கப்பட்டது