மும்பை கலவரங்கள்

மும்பை மாநகரத்தில் டிசம்பர் 1992 முதல் சனவரி 1993 முடிய நடைபெற்ற தொடர் கலவரங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் 900 பேர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 575 பேர் முஸ்லீம்கள், 275 பேர் இந்துக்கள் மற்றும் 50 பிற சமயத்தவர்கள் ஆவர்.[1][2] 6 டிசம்பர் 1992 அன்று அயோத்தியில் இந்து கரசேவகர்களால் பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்வினையாக மும்பை முஸ்லீம்களின் பெரிய அளவிலான எதிர்ப்புகளின் விளைவாக இக்கலவரங்கள் நடைபெற்றது.[3]

1992-93 மும்பை கலவரங்காள்
தேதி6 டிசம்பர் 1992 – 26 சனவரி 1993
அமைவிடம்
உயிரிழப்புகள்
இறப்பு(கள்)சுமார் 900, 575 முஸ்லீம்கள், 275 இந்துக்கள், 50 பிறர்.

இந்த வன்முறைகளானது தாவூத் இப்ராகிம் கூட்டளிகளின் உதவியுடன், உள்ளூர் முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாக பரவலாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மகாராஷ்டிராவில் இந்து-தேசியவாத அரசியல் கட்சியான சிவசேனாவும் தங்களுக்கு எதிரான வன்முறைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கலவரங்களில் கலந்து கொண்டது.[4][5] இக்கலவரங்களில் 275 இந்துக்கள், 575 முஸ்லிம்கள் மற்றும் 50 பேர் இறந்தனர்.[6] இக்கலவரங்களைத் தொடர்ந்து 12 மார்ச் 1993 அன்று மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தது. இக்குண்டு வெடிப்புகளால் 250 மக்கள் உயிரிழந்தனர். 700 மக்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் பாபர் மசூதி இடிப்புக்கான எதிர்தாக்குதல் என்று இந்திய அரசு நம்புகிறது.[7]

பின்னணி

தொகு

6 டிசம்பர் 199 அன்று அயோத்தி பாபர் மசூதி இடிப்பு இக்கலவரங்களுக்கு உடனடி காரணமாக கருதப்படுகிறது.

சிறீ கிருஷ்ணா அறிக்கை

தொகு

இக்கல்வரங்கள் தொடர்பாக அனைத்து விசாரணைகள் மேற்கொள்ள மகாராட்டிரா அரசு ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தை நிறுவியது. ஆணையத்தின் அறிக்கையின்படி, முதல் கட்டமாக 6 டிசம்பர் 1992 அன்று பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு மும்பை மாநகரத்தில் நிலவிய வகுப்புவாத பதட்டத்தின் விளைவாக கலவரங்கள் தொடங்கியது. இரண்டாம் கட்டமாக சனவரி 1993ல் தெற்கு மும்பையின் டோங்கிரிப் பகுதியில் இந்துத் தொழிலாளர்களை முஸ்லீம் வெறியர்களால் கத்தியால் கொல்லப்பட்டனர் மற்றும் ஊனமுற்றோர் உட்பட ஆறு இந்துக்கள் எரிக்கப்பட்டதே கலவரங்களுக்கு அடிப்படைக் காராணம் ஆகும். கலவரங்களில் பெரும்பாலான சம்பவங்கள் சனவரி 6 மற்றும் 20க்கும் இடையில் பதிவாகியுள்ளது.

அச்சு ஊடகங்களில் குறிப்பாக சாம்னா பத்திரிக்கைச் செய்திகளில் இராதாபாய் சாவல் சம்பவம் பற்றி மிகைப்படுத்தப்பட்ட எழுத்துகளால் இந்துக்களின் வகுப்புவாத உணர்வுகள் தூண்டப்பட்டது என்று சிறீ கிருஷ்ணா ஆனைய அறிக்கை வலியுறுத்தியது. 8 சனவரி 1993 முதல், சிவசேனா தலைமையிலான இந்துக்களுக்கும், அந்த நேரத்தில் மும்பை நிழல் உலக கும்பல் தலைவன் தாவூத் இப்ராகிமால் நிதியளிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் இடையே பல கலவரங்கள் நிகழ்ந்தன. கலவரத்தின் முடிவில் 575 முஸ்லிம்களும் 275 இந்துக்களும் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. டோங்ரி மற்றும் ராதாபாய் சாவல் எரிப்பு மூலம் வகுப்புவாத வன்முறை மற்றும் கலவரம் தூண்டப்பட்டது. மேலும் சிவசேனாவின் பழிவாங்கும் வன்முறை உள்ளூர் குற்றச் சக்திகளால் நிறைவேற்றப்பட்டது.

சிவசேனாவின் பங்கு

தொகு

மும்பை கலவரங்கள் மகாராஷ்டிராவில் உள்ள இந்து-தேசியவாத அரசியல் கட்சியான சிவசேனாவால் திட்டமிடப்பட்டதாக பரவலாக அறியப்பட்டது.[8] சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக சிவசேனா வெறுப்பைத் தூண்டியதாக கருதப்பட்டது.[9] வரலாற்றாசிரியர் பார்பரா மெட்கால்ஃப் இந்த கலவரங்கள் முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை என்று கூறியுள்ளார்.[10] சிவசேனாவின் தலைவரான பால் தாக்கரே, கலவரத்திற்கு உடந்தையாக இருந்ததற்காகவும், கலவரத்தை பிரச்சாரம் செய்ய உதவிய 'எதிர்ப்பு எழுத்துக்களுக்காகவும்' சூலை 2000 இல் கைது செய்யப்பட்டார்..[11] பின்னர் பால் தாக்கரே மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

கைதுகள், தண்டனைகள் மற்றும் தீர்ப்பு

தொகு

1992-93 பம்பாய் கலவர வழக்குகளில் 3 நபர்களுக்கு மட்டுமே தண்டனைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டது.[12] 10 சூலை 2008 அன்று, கலவரம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் சிவசேனா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மதுகர் சர்போத்தர் மற்றும் இரண்டு கட்சி செயல்பாட்டாளர்களுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது.[13][14] இருப்பினும் மதுகர் சர்போத்தருக்கு உடனடியாக நீதிமன்ற பிணை வழங்கப்பட்டது.[20] மேலும் மதுகர் 20 பிப்ரவரி 2010 அன்று தண்டனையை நிறைவேற்றாமலேயே இறந்தார்.[15]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Engineer, Asghar Ali (7 May 2012). "The Bombay riots in historic context". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-bookreview/the-mumbai-riots-in-historic-context/article3395359.ece. 
  2. "Why there's no noise about the Bombay riots".
  3. "Full Srikrishna report: Chapter 1". Sabrang Communications.
  4. Blom Hansen, Thomas (2001). Wages of Violence: Naming and Identity in Postcolonial Bombay. Princeton University Press. p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0691088402.
  5. Tambiah, Stanely J. (1997). Leveling Crowds: EthnoNationalist Conflicts and Collective Violence in South Asia. University of California Press. p. 254. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0520206427.
  6. "Understanding the link between 1992-93 riots and the 1993 Bombay blasts". Firstpost. 6 August 2015.
  7. ERCES Online Quarterly Review பரணிடப்பட்டது 10 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம் Religious Identity of the Perpetrators and Victims of Communal Violence in Post-Independence India
  8. Tambiah, Stanely J. (1997). Leveling Crowds: EthnoNationalist Conflicts and Collective Violence in South Asia. University of California Press. p. 254. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0520206427.
  9. Blom Hansen, Thomas (2001). Wages of Violence: Naming and Identity in Postcolonial Bombay. Princeton University Press. p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0691088402.
  10. Metcalf, Barbara (2006). Robert W. Hefner, Muhammad Qasim Zaman (ed.). Schooling Islam: The Culture and Politics of Modern Muslim Education. Princeton University Press. p. 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0691129334.
  11. "Thackeray arrested, freed by court". தி இந்து. 2000-07-26. பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.[தொடர்பிழந்த இணைப்பு]
  12. "Yakub Memon case: one chart that shows just how partisan India's justice system can be".
  13. "Former Sena MP sentenced". தி இந்து. 10 July 2008 இம் மூலத்தில் இருந்து 2 ஆகஸ்ட் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080802204653/http://www.hindu.com/2008/07/10/stories/2008071057670100.htm. 
  14. "Shiv Sena politician convicted over 1992 Mumbai riots". Reuters. 9 July 2008 இம் மூலத்தில் இருந்து 28 நவம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201128232254/https://in.reuters.com/article/idINIndia-34444720080709. 
  15. "Sena leader Madhukar Sarpotdar dies". DNA. 20 February 2010. பார்க்கப்பட்ட நாள் 21 February 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_கலவரங்கள்&oldid=4110092" இலிருந்து மீள்விக்கப்பட்டது