மும்மெத்திலீன் கார்பனேட்டு

மும்மெத்திலீன் கார்பனேட்டு (Trimethylene carbonate) என்பது C4H6O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1,3-புரோப்பைலீன் கார்பனேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இது ஒரு 6 உறுப்பினர் வளைய கார்பனேட்டு எசுத்தர் வகைச் சேர்மமாகும். நிறமற்ற திண்மமான இச்சேர்மம் சூடுபடுத்தும் போது பல்மும்மெத்தில் கார்பனேட்டாக மாற்றமடைகிறது. இத்தகைய பலபடிகள் உயிரிமருத்துவ பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. புரோப்பைலீன் கார்பனேட்டு இதனுடைய மாற்றிய வழிபொருளாகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் தன்னிச்சையாக பலபடியாவதில்லை.

மும்மெத்திலீன் கார்பனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,3-டையாக்சான்-2-ஓன்
இனங்காட்டிகள்
2453-03-4
ChemSpider 110377
InChI
  • InChI=1S/C4H6O3/c5-4-6-2-1-3-7-4/h1-3H2
    Key: YFHICDDUDORKJB-UHFFFAOYSA-N
  • InChI=1/C4H6O3/c5-4-6-2-1-3-7-4/h1-3H2
    Key: YFHICDDUDORKJB-UHFFFAOYAZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123834
  • O=C1OCCCO1
UNII 4316AQ174Q Y
பண்புகள்
C4H6O3
வாய்ப்பாட்டு எடை 102.09 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

1,3-புரோப்பேண்டையால் மற்றும் எத்தில் குளோரோபார்மேட்டு (பாசுகீன் பதிலி) வினைபுரிந்து அல்லது ஆக்சிடேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு உடன் பொருத்தமான ஒரு வினையூக்கி வினைபுரிவதால் மும்மெத்திலீன் கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது:[1]

HOC3H6OH + ClCO2C2H5 → C3H6O2CO + C2H5OH + HCl
C3H6O + CO2 → C3H6O2CO

இந்த வளைய கார்பனேட்டு வளைய திறப்பு பலபடியாக்க வினையில் ஈடுபட்டு பல்(மும்மெத்திலீன் கார்பனேட்டு) உருவாகிறது, இந்தப் பலபடி வர்த்தக முக்கியத்துவம் உள்ள சேர்மமாகவும், உயிரிமருத்துவப் பயன்கள் கொண்டதாகவும் எளிதில் உயிரினச் சிதைவு அடையக்கூடியதாகவும் உள்ளது[2]

மேற்கோள்கள் தொகு

  1. Pyo, Sang-Hyun; Persson, Per; Mollaahmad, M. Amin; Sörensen, Kent; Lundmark, Stefan; Hatti-Kaul, Rajni (2012). "Cyclic carbonates as monomers for phosgene- and isocyanate-free polyurethanes and polycarbonates". Pure Appl. Chem. 84 (3): 637. doi:10.1351/PAC-CON-11-06-14. 
  2. Engelberg, Israel; Kohn, Joachim (1991). "Physicomechanical properties of degradable polymers used in medical applications: a comparative study". Biomaterials 12 (3): 292–304. doi:10.1016/0142-9612(91)90037-B. https://archive.org/details/sim_biomaterials_1991-04_12_3/page/292. 

.