முரசு அஞ்சல்

முரசு அஞ்சல், விண்டோசு, மாக்கிண்டோசு ஆகியவற்றில் தமிழில் எழுத உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை முத்து நெடுமாறன் என்ற மலேசியத் தமிழர் 1985 ஆம் ஆண்டில் உருவாக்கினார். இம்மென்பொருள் முதன்முதலில் டாஸ் 3.1 இயங்குதளத்தில் இயங்கியது. ஆண்டுதோறும் இதன் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுகின்றன. முரசு அஞ்சல் 5.0 தான் விண்டோசு இயங்குதளத்தில் இயங்கிய முதல் பதிப்பு. மாக் இயங்குதளத்திற்கான முரசு அஞ்சல் ஆப்பிள் நிறுவனத்தாலேயே வழங்கப்பட்டது. தமிழில் வெளிவந்த சிறப்பு மென்பொருட்களுள் இதுவும் ஒன்று.

மலேசியாவின் அனைத்து தமிழ்ச் செய்தி நாளேடுகளும், வார ஏடுகளும் முரசு அஞ்சலைக் கொண்டே இயங்கின. மலேசிய அரசு இம்மென்பொருளை தரமுயர்த்தி, இதையே மலேசியாவின் 523 தமிழ்ப் பள்ளிகளிலும் பயன்படுத்த உத்தரவிட்டது>

இன்று பல்லாயிரக்கணக்கானோர் முரசு அஞ்சலை பயன்படுத்துகின்றனர்.

முரசு அஞ்சல் 10 ஆம் பதிப்பில் அகராதி, உள்ளீட்டு முறை, விசைப்பலகை ஆகிய கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. பல எழுத்துருக்களுக்கு ஆதரவு வழங்குகிறது.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "முரசு அஞ்சலைப் பற்றி". பார்த்த நாள் 25-09-2021. (ஆங்கில மொழியில்)

மேலும் பார்க்கதொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முரசு_அஞ்சல்&oldid=3286946" இருந்து மீள்விக்கப்பட்டது