முரினா ரெகோண்டியா
முரினா ரெகோண்டியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கைராப்பிடிரா
|
குடும்பம்: | வெசுஸ்பெர்டிலியோனிடே
|
பேரினம்: | முரினா
|
இனம்: | மு. ரெகோண்டியா
|
இருசொற் பெயரீடு | |
முரினா ரெகோண்டியா குஆ, பேங், சோர்பா, & லீ, 2009 |
முரினா ரெகோண்டிடா (Murina recondita) என்பது தைவானில் காணப்படும் ஒரு வகை வெளவால் ஆகும்.[1]
வகைப்பாட்டியல்
தொகுமுரினா ரெகோண்டிடா 2009ஆம் ஆண்டில் ஒரு புதிய சிற்றினமாக விவரிக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டில் தைவானின் ருய்சுயியில் ஹோலோடைப் சேகரிக்கப்பட்டது. இதன் இனங்கள் சிற்றினப் பெயரான "ரெகோண்டிடா" என்பது "மறைக்கப்பட்ட" அல்லது "மறைந்துகொண்ட" என்று பொருள்படும். மேலும் இதன் உரோமங்களின் மந்தமான நிறத்தைக் குறிக்கும் வகையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டது[2]
விளக்கம்
தொகுஇந்த பேரினத்தில் உள்ள சிறிய வெளவால் இதுவாகும். இதன் முன்கையின் நீளம் 28 முதல் 31.5 மி.மீ. வரை உள்ளது.[2]
வாழிடமும் பரம்பலும்
தொகுமுரினா ரெகோண்டிடா தைவானில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும். இது மலைப்பாங்கான மற்றும் மலைப்பகுதிகளில் வாழ்கிறது. இவை கடல் மட்டத்திலிருந்து சுமார் 40 முதல் 2,200 மீ (130–7,220 அடி) உயரத்தில் காணப்படுவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Lee, L.; Kuo, H. (2017). "Murina recondita". IUCN Red List of Threatened Species 2017: e.T84500842A84500845. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T84500842A84500845.en. https://www.iucnredlist.org/species/84500842/84500845.
- ↑ 2.0 2.1 Kuo, Hao-Chih; Fang, Yin-Ping; Csorba, Gábor; Lee, Ling-Ling (2009). "Three New Species of Murina (Chiroptera: Vespertilionidae) from Taiwan". Journal of Mammalogy 90 (4): 980–991. doi:10.1644/08-MAMM-A-036.1. https://archive.org/details/sim_journal-of-mammalogy_2009-08_90_4/page/980.
External links
தொகு- விக்கியினங்களில் Murina recondita பற்றிய தரவுகள்