முருகப்பா குடும்பம்
முருகப்பா குடும்பம் (Murugappa family) என்பது இந்தியாவின் முருகப்பா குழுமம் என்ற பல் தொழில் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆவர். இவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களின் குடும்ப நிறுவனமான முருகப்பா குழுமம் சைக்கிள், சர்க்கரை, உரம், உற்பத்தி என பல தொழில்களில் ஈடுபட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு இந்த குடும்பத்தின் நிகரச் சொத்து மதிப்பு 7.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். [1]
முருகப்பா குரூப்பின் நிர்வாக இயக்குநர் எம்.எம்.முருகப்பன் ஏ. வெள்ளையன், முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் முருகப்பா குடும்பத் தலைவர் எம். வி. சுப்பையா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.