முரெக்சு
புதைப்படிவ காலம்:கிரீத்தேசியக் காலம் - அண்மை
வீனசு சீப்பு முரெக்சு, முரெக்சு பெக்டன் பக்கவாட்டு காட்சி, பக்கத்தின் முன்புறம் முன்புற முனை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
நியோகேசுட்ரோபோட்டா
குடும்பம்:
மூரிசிடே
பேரினம்:
முரெக்சு
சிற்றினம்

உரையினைப் பார்க்கவும்

வேறு பெயர்கள் [1]
  • அக்குபுர்புரா ஜூஸ்ஸம், 1880
  • அரானியே பெரி, 1810 (Invalid: junior homonym of Aranea லின்னேயஸ் 1758 [அராக்னிடா])
  • டுயுபிகாடா ஜூஸ்ஸம், 1880

முரெக்சு (Murex) என்பது நடுத்தர முதல் பெரிய அளவிலான இரைகெளவல் வெப்பமண்டல கடல் நத்தைகளின் பேரினமாகும். இவை ஊனுண்ணி பெருங்கடல் வயிற்றுக்காலி மெல்லுடலிகளாகும். இவை முரிசிடே குடும்பத்தினைச் சார்ந்தவை. பொதுவாக இவை ”முரெக்சு” என்றும் "பாறை நத்தை" என்றும் அழைக்கப்படுகின்றன.[1]

பொதுவான பெயரான முரெக்சு என்பது முரிசிடே குடும்பத்தில் உள்ள பல சிற்றினங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. முரிசிடே குடும்பத்தில் முதலில் இலத்தீன் பொதுவான பேரினப் பெயர் முரெக்சு என்று வழங்கப்பட்டது. ஆனால் வெவ்வேறு புதிய பேரினப் பெயர் பின்னர் வழங்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டன.

முரெக்சு என்ற சொல்லானது அரிசுடாட்டிலால் இந்த பேரின நத்தைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.  எனவே அறிவியல் சமூகத்தால் இன்னும் பழமையான கடல் நத்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் பெயராக இது உள்ளது.

புதைபடிவ பதிவுகள்

தொகு

இந்த பேரினமானது புதைபடிவ பதிவுகளின் படி கிரீத்தேசியக் காலம் முதல் குவாட்டர்னரி வரை அறியப்படுகிறது (வயது வரம்பு: 125.45 முதல் 0.0 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை). இந்த பேரினத்தில் உள்ள உயிரினங்களின் புதைபடிவங்கள் உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அழிந்துபோன சுமார் 25 சிற்றினங்கள் இந்தப் பேரினத்தின் கீழ் உள்ளன.[2]

 
முரெக்சு அல்டிசுபிரா
 
இத்தாலியின் பிளியோசீனிலிருந்து முரெக்சு இசுபினிகோசுடாவின் புதைபடிவ ஓடு

பரவல்

தொகு

முரெக்சு என்பது ஒரு இந்தோ-பசிபிக் பேரினமாகும். இது பாண்டர் & வோக்ஸ் (1988) மூலம் விவரிக்கப்பட்டது. முன்னர் முரெக்சு பேரினத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்ட மேற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் சிற்றினங்கள் இப்போது ஹவுசுடெல்லம் பேரினத்தில் வைக்கப்பட்டுள்ளன.

வாழ்விடம்

தொகு

பெரும்பாலான முரெக்சு இனங்கள் பாறைகள் மற்றும் பவளப்பாறைகளுக்கு இடையில் அல்லது ஆழமற்ற அலை இடை மண்டலத்தில் வாழ்கின்றன.

ஓடு விளக்கம்

தொகு

இந்த பேரினத்தில் பல கவர்ச்சியான ஒட்டுடைய சிற்றினங்கள் உள்ளன. இவற்றின் நீளமான ஓடு முட்களுடன் காணப்படுகின்றன. ஓட்டின் உட்பகுதி பிரகாசமான நிறத்தில் காணப்படும்.

மனித பயன்பாடு

தொகு

விலையுயர்ந்த மற்றும் உழைப்பு மிகுந்த சாயங்கள் டைரியன் ஊதா (அல்லது ராயல் ஊதா ) மற்றும் டெக்லெட் ஆகிய சாயங்கள் முறையே பண்டைய போனீசியா மற்றும் யூதர்களால் தயாரிக்கப்பட்டது. இவர்கள் பொதுவாக "முரெக்சு" என அழைக்கப்படும் இரண்டு சிற்றினங்களான மியூரெக்ஸ் பிராண்டாரிஸ் மற்றும் முரெக்ஸ் ட்ரன்குலஸ் ஹைபோபிரான்கியல் சுரப்பியின் சளியைப் பயன்படுத்தி தயார் செய்தனர். இவற்றின் முந்தைய பெயர், ஹவுசுடெல்லம் பிராண்டெரிசு (போலினசு பிராண்டெரிசு) மற்றும் ஹெக்சாபிளக்சு டிரன்குலசு (பைலோனேட்டசு டிரன்குலசு).[3] இந்த சாயம் அரிய விலங்கு உற்பத்தி பொருளான, ஆர்கனோபுரோமைன் கலவை ஆகும், இதனை நத்தைகள் கடல் நீரில் கரைந்த புரோமைடில் செயல்படும் குறிப்பிட்ட புரோமோபெராக்சிடேசு நொதியைப் பயன்படுத்தி உற்பத்திசெய்கிறது.[4]

இந்த சாயம் அரச ஆடைகள், மற்ற வகையான சிறப்பு விழா அல்லது நிகழ்ச்சிக்கான ஆடைகள் அல்லது உயர் பதவிகளைக் குறிக்கும் ஆடைகளில் பயன்படுத்தப்பட்டது. எருசலேமில் உள்ள பழங்கால கோயிலில் முக்கிய போதகர் (அல்லது கோஹன் காடோல்) அணிந்திருந்த ஆடையின் சாயம் இந்த சாயம் என்று அனுமானிக்கப்படுகிறது. இது சில சமயங்களில் யூதர்களால் இன்றும் சடங்குகளின் போது ஆடைகளின் நான்கு மூலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.[5] "நீல" சாயத்தின் மூலத்தைப் பற்றி விவிலிய கருத்து குறித்து இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

சிற்றினங்கள்

தொகு

பேரினம் முரெக்சு, முதன் முதலில் கரோலஸ் லின்னேயசால் வரையறுக்கப்பட்டது. இதிலிருந்த பல்வேறு இனங்கள் இப்போது முரிகோயிடே பெருங்குடும்பமாக வேறுபடுத்தி வைக்கப்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டில், முரெக்சு ஜீன் பாப்தித்தே லாமார்கினால் வரையறுக்கப்பட்டது. மேலும் சமகால ஆய்வாளர்களால் முரிசினே மற்றும் ஓசினேபிரினே துணைக்குடும்பமாக்கப்பட்டன. உலக பெருங்கடல் உயிரிகள் பதிவேட்டின்படி முரெக்சில் 50க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Houart, R.; Gofas, S. (2010). Murex Linnaeus, 1758. In: Bouchet, P.; Gofas, S.; Rosenberg, G. (2010) World Marine Mollusca database. Accessed through: World Register of Marine Species at http://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=138196 on 2011-04-09
  2. "Fossilworks". Archived from the original on 2021-02-05. பார்க்கப்பட்ட நாள் 2021-08-04.
  3. Sukenik, Naama; Iluz, David; Amar, Zohar; Varvak, Alexander; Shamir, Orit; Ben-Yosef, Erez (2021). "Early evidence of royal purple dyed textile from Timna Valley (Israel)". PLOS ONE 16 (1): e0245897. doi:10.1371/journal.pone.0245897. பப்மெட்:33507987. பப்மெட் சென்ட்ரல்:7842898. https://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0245897. 
  4. Jannun R., Nuwayhid N. and Coe E. (1981) Biological bromination – bromoperoxidase activity in the Murex sea-snail. FASEB. J. 40, 1774.
  5. Tekhelet - Biblical Blue Dye for Tzitzit
  6. WoRMS : Murex 23 December 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=முரெக்சு&oldid=3568184" இலிருந்து மீள்விக்கப்பட்டது