முறப்பாநாடு கைலாசநாதர் கோயில்
முறப்பாநாடு கைலாசநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் முறப்பநாடு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
முறப்பநாடு கைலாசநாதர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 8°43′20″N 77°49′51″E / 8.722342°N 77.830815°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தூத்துக்குடி மாவட்டம் |
அமைவிடம்: | முறப்பநாடு |
சட்டமன்றத் தொகுதி: | ஓட்டப்பிடாரம் |
மக்களவைத் தொகுதி: | தூத்துக்குடி |
ஏற்றம்: | 47 m (154 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | கைலாசநாதர் |
தாயார்: | சிவகாமி |
குளம்: | தட்சிண கங்கை |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, குருப்பெயர்ச்சி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
அமைவிடம்
தொகுஇக்கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் முறப்பநாடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் கோவில்பத்து என்றழைக்கப்பட்டது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 47 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 8°43'20.4"N, 77°49'50.9"E (அதாவது, 8.722342°N, 77.830815°E) ஆகும்.
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலின் மூலவராக கைலாசநாதர் உள்ளார். இங்குள்ள இறைவி சிவகாமி ஆவார். கோயிலின் தீர்த்தம் தட்சிண கங்கை ஆகும். சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷம், மாதப்பிறப்பு நாட்கள் மற்றும் குருப் பெயர்ச்சி போன்ற நாட்களில் விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.[1]
அமைப்பு
தொகுதாமிரபருணியின் மேற்கு கரையில் இக்கோயில் உள்ளது. நவ கைலாசங்களில் இக்கோயில் ஐந்தாவது கைலாசமாகக் கூறப்படுகிறது. மூலவருக்கு எதிரே காணப்படுகின்ற நந்தி குதிரை முகத்துடன் உள்ளது. பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். திருச்சுற்றில் சூரியன், அதிகார நந்தி, ஜுரதேவர், சப்தகன்னியர், நாயன்மார், பஞ்சலிங்கம், கன்னி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சனீசுவரர் ஆகியோர் உள்ளனர். அகத்தியரின் சீடரான உரோமச ரிஷிக்கு இறைவன் இங்கு குருவாகக் காட்சி தந்ததாகக் கூறுவர்.[1]