முற்று
முற்று என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும்.
கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது:
- "இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம்
- இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய்
- வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்
- வருசீர் முழுவதும் ஒன்றன்முற் றாமென்ப மற்றவையே." (யாப்பருங்கலக்காரிகை 19-வது செய்யுள்)
சீர்களின் அமைப்பு
தொகுசெய்யுளின் அடியில் 4 சீர்களுமே ஒரே வகையான தொடை அமையப்பெரின் முற்றுத்தொடை விகற்பம் எனப்படும்.
தொடை விகற்ப வகைகள்
தொகுபின்வரும் 5 வகைகளில் இவ்விகற்பம் அமையும்:
- முற்று மோனைத் தொடை
- முற்று இயைபுத்தொடை
- முற்று எதுகைத்தொடை
- முற்று முரண் தொடை
- முற்று அளபெடைத்தொடை
எடுத்துக்காட்டுகள்
தொகு"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.." (12-வது திருக்குறள், அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு)
மேற்கண்ட குறளில் முதலடியில் நான்கு சீர்களுமே "து" என்று மோனையெடுக்கின்றன. எனவே இச்செய்யுள் முற்று மோனைத்தொடை வகையை பின்பற்றுகிறது எனலாம்.