முலுக் கொலை வழக்கு
முலுக் கொலை வழக்கு (Muluk murder case) 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள போல்பூரில் உள்ள முலுக்கில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)) செயற்பாட்டாளர்களால் நான்கு இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) செயற்பாட்டாளர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடுகிறது [1] [2]
அன்றைய தினம் காலை அந்த கிராமத்தின் வழியாக சென்ற மார்க்சியப் பிரிவு இந்தியப் பொதுவுடமைக் கட்சி ஊர்வலம் வயலில் இருந்த நான்கு நக்சலைட்டு விவசாயத் தொழிலாளர்களை தாக்கியது. அந்த கும்பல் அவர்களை தடியால் அடித்து கொன்றது. சேக்கு சியாவுதீன், சேக்கு மன்னன், சுதிர் கோசு மற்றும் நிர்மல் கோசு ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். மார்க்சியம்-லெனினிய பிரிவைச் சார்ந்த இந்தியப் பொதுவுடமைக் கட்சிப் பிரிவின் ஆதரவாளர்களாக இவர்கள் அடையாளம் காணப்பட்டனர். [2]
31.3. 2009 ஆம் ஆண்டு கொலை வழக்கில் தொடர்புடைய 46 இந்தியப் பொதுவுடமைக் கட்சி மார்க்சியப் பிரிவு கட்சிக்காரர்களுக்கு பிர்பூமின் மாவட்ட நீதிபதி தீபக் சாக ரே ஆயுள் தண்டனை விதித்தார். இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) உறுப்பினர்களான அக்தர் சேக், முலுக் கிராம பஞ்சாயத்தின் அப்போதைய இந்தியப் பொதுவுடமைக் கட்சி உறுப்பினர் உபபிரதான், அப்போதைய பஞ்சாயத்து சமிதி உறுப்பினர் ரூசன் அலி, கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மிசுதிரி முர்மு மற்றும் சஃபியுல், கிளைக் குழுச் செயலர் ரகுமான் ஆகியோர் தண்டனை பெற்றவர்களில் அடங்குவர். இவர்களைத் தவிர, இரண்டு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், மாநில மின்சார வாரிய ஊழியர் மற்றும் என்விஎஃப் ஊழியர் ஒருவரும் தண்டனை பெற்றவர்களில் அடங்குவர். இந்த வழக்கில் 56 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்களில் 10 பேர் இறந்துவிட்டனர். இந்திய தண்டனைச் சட்டம் 302, 307 மற்றும் 149 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ. 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Decades on, conviction for CPM 46". The Telegraph. 31 March 2009. Archived from the original on 1 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-08-08.
- ↑ 2.0 2.1 2.2 "46 CPM men get life for murders". 1 April 2009. Archived from the original on 2013-02-22. பார்க்கப்பட்ட நாள் 2009-08-08.