போல்பூர் (Bolpur), கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்திலுள்ள் நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான சியுரிக்கு தென்கிழக்கே 36.8 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு வடமேற்கே 193.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது அஜய் ஆற்றின் கரையில் உள்ளது. இந்நகரத்தை ஒட்டிய சாந்திநிகேதன் பகுதியில் இரவீந்திரநாத் தாகூர் நிறுவிய விஸ்வபாரதி பல்கலைக்கழகம் உள்ளது.

போல்பூர்
நகரம்
கோய் சாலை
கோய் சாலை
போல்பூர் is located in மேற்கு வங்காளம்
போல்பூர்
போல்பூர்
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் போல்பூர் நகரத்தின் அமைவிடம்
போல்பூர் is located in இந்தியா
போல்பூர்
போல்பூர்
போல்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°40′N 87°43′E / 23.67°N 87.72°E / 23.67; 87.72
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்பிர்பூம்
கோட்டம்பர்த்வான்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்போல்பூர் நகராட்சி
பரப்பளவு[1]
 • நகரம்33.45 km2 (12.92 sq mi)
 • Metro[2]106.28 km2 (41.03 sq mi)
ஏற்றம்58 m (190 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • நகரம்112,591
 • அடர்த்தி3,400/km2 (8,700/sq mi)
மொழி
 • அலுவல் மொழிவங்காள மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்731204 (போல்பூர்)
731235 (சாந்திநிகேதன்)
731236 (சிறிநிகேதன்)
தொலைபேசி குறியீடு எண்03463
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-WB
வாகனப் பதிவுWB-47
இரயில் நிலையங்கள்போல்பூர் சாந்திநிகேதன் (BHP)
பிராந்திக் (PNE)
மக்களவை தொகுதிபோல்பூர்
சட்டமன்றத் தொகுதிகள்போல்பூர் & நானூர்
இணையதளம்bolpur-santiniketan.com
bolpurmunicipality.org
santiniketan.com

தட்ப வெப்பம் தொகு

போல்பூர் நகரத்தின் கோடைக்கால அதிகபட்ச வெப்பம் 47.0 °C; குளிர்கால குறைந்தபட்ச வெப்பம் 5.0 °C ஆக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 18 வார்டுகளும், 19,032 வீடுகளும் கொண்ட போல்பூர் நகரத்தின் மக்கள் தொகை 80,210 ஆகும். அதில் ஆண்கள் 40,468 மற்றும் பெண்கள் 39,742 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 982 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8.54% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 86.77% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 89.77%, இசுலாமியர் 9.68%, பௌத்தர்கள் , சமணர்கள் , சீக்கியர்கள் , கிறித்தவர்கள் 0.19% மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர். இந்நகர மக்கள் வங்காள மொழி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.[3]

போக்குவரத்து தொகு

இரயில் நிலையம் தொகு

போல்பூர்-சாந்திநிகேதன் இரயில் நிலையம்[4], கொல்கத்தா, அகர்தலா, புவனேஸ்வர், மும்பை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் நகரங்களை இணைக்கிறது.

சாலைகள் தொகு

தேசிய நெடுஞ்சாலை எண் 114 (பழைய எண் 2B) போல்பூர் நகரம் வழியாகச் செல்கிறது.

வானூர்தி நிலையம் தொகு

இதன் அருகே அமைந்த வானூர்தி நிலையம் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துர்காபூர் விமான நிலையம் ஆகும்.

கல்வி தொகு

  • விஸ்வபாரதி பல்கலைக்கழகம்
  • சீகாம் திறன் பல்கலைக்கழகம்
  • போல்பூர் பல்கலைக்கழகம் (விஸ்வ வங்காள விஸ்வ வித்தியாலயம்)
  • போல்பூர் கல்லூரி
  • பூர்ணி தேவி சௌத்திரி மகளிர் கல்லூரி
  • சாந்திநிகேதன் மருத்துவக் கல்லூரி
  • வங்காள தொழில்நுட்பம் & மேலாண்மை நிறுவனம்
  • சாந்திநிகேதன் பாலிடெக்னிக் கல்லூரி, போல்பூர்[5]
  • சாந்திநிகேதன் செவிலியர் கல்லூரி

சுற்றுலா தொகு

பல்லாப்பூர் வனவிலங்கு சரணாலயம், சாந்திநிகேதன்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்பூர்&oldid=3691620" இருந்து மீள்விக்கப்பட்டது