சியுரி
சியுரி அல்லது சுவ்ரி (Suri-Siuri) (pronounced [sIʊərɪ]) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது கொல்கத்தாவிற்கு வடமேற்கே 224.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அருகமைந்த நகரங்கள்: ஆசன்சோல் 79 கிமீ; துர்காபூர் 60 கிமீ மற்றும் ராணிகஞ்ச் 62 கிமீ.
சியுரி
சூரி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 23°55′00″N 87°32′00″E / 23.9167°N 87.5333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | பிர்பூம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | சியுரி நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 9.47 km2 (3.66 sq mi) |
ஏற்றம் | 71 m (233 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 67,864 |
• அடர்த்தி | 7,200/km2 (19,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | வங்காள மொழி |
• கூடுதல் மொழி | ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 731101 |
தொலைபேசி குறியீடு | 91 3462 |
வாகனப் பதிவு | WB-54 |
மக்களவைத் தொகுதி | பிர்பூம் |
சட்டமன்றத் தொகுதி | சியுரி |
இணையதளம் | birbhum |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 18 வார்டுகளும், 15,385 வீடுகளும் கொண்ட சியுரி நகரத்தின் மொத்த மக்கள்தொகை 67,864 ஆகும். அதில் 34,579 ஆண்கள் மற்றும் பெண்கள் 33,285 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5935 (8.75%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 963 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.95% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 73.65%, முஸ்லீம்கள் 25.86% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.[1]
தொடருந்து நிலையம்
தொகுசிவ்ரி தொடருந்து நிலையம் வழியாக கொல்கத்தா, ராஞ்சி, சூரத், புரி, கவுகாத்தி, திப்ருகார் மற்றும் தாம்பரம் போன்ற நகரங்களுக்கு விரைவு வண்டிகளும், பயணியர் வண்டிகளும் செல்கிறது. [2] சியுரிலிருந்து ஆசன்சோல் செல்ல 6 தொடருந்துகள் உள்ளது. [3]
கல்வி
தொகு- பிர்பூம் கல்லூரி
- ஈஸ்வர சந்திர வித்யாசாகர் கல்லூரி
- பிர்பூம் பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரி
- இராமகிருஷ்ணா சிற்பக் கல்லூரி