பல்லாப்பூர் வனவிலங்கு சரணாலயம்

பல்லாப்பூர் வனவிலங்கு சரணாலயம் (Ballabhpur Wildlife Sanctuary) மான் பூங்காவிற்கு பிரபலமானது. இந்த சரணாலயம் 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியாவிலுள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்திலுள்ள போல்பூர் உட்பிரிவிலுள்ள சாந்திநிகேதன் அருகே இந்த வனப்பகுதி அமைந்துள்ளது.

பல்லாப்பூர் வனவிலங்கு சரணாலயம்
மான் பூங்கா
Map showing the location of பல்லாப்பூர் வனவிலங்கு சரணாலயம்
Map showing the location of பல்லாப்பூர் வனவிலங்கு சரணாலயம்
அமைவிடம்பிர்பூம் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா
அருகாமை நகரம்சாந்திநிகேதன்
ஆள்கூறுகள்23°41′06″N 87°39′11″E / 23.685011°N 87.653021°E / 23.685011; 87.653021
பரப்பளவு2 சதுர கிலோமீட்டர்கள் (0.77 sq mi)
நிறுவப்பட்டது1977

நிலவியல் தொகு

இந்த வனவிலங்கு சரணாலயம் சாந்திநிகேதனில் அமைந்துள்ளது. இது சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 56 மீட்டர் (184 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[1]

காலநிலை தொகு

கோடைகாலத்தில், வெப்பநிலை 40 ° C (104 ° F) க்கும் அதிகமாக இருக்கும். குளிர்காலத்தில் 10 ° C (50 ° F) குறைவாக இருக்கும். இந்த இடத்தின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 1,212 மில்லிமீட்டர் (47.7 அங்குலம்) ஆக உள்ளது. பெரும்பாலும், பருவமழைக் காலம் ஜூன் முதல் அக்டோபர் வரை உள்ள காலமாக உள்ளது. [2][3]

விலங்குகள் தொகு

இக்காப்பகம் பலவகை மான்களின் இருப்பிடமாகும். இங்கு கலைமான்கள் மற்றும் புள்ளிமான்களை காணலாம். மேலும் நரிகள், நீர் பறவைகள், குள்ள நரிகள் ஆகியவற்றையும் காணலாம்.[4]

பார்வை நேரம் தொகு

இச்சரணாலயம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும். இது புதன் கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. Falling Rain Genomics, Inc - Santiniketan
  2. Mondal, Dipanwita, Ek Najare Birbhum Jela, Paschim Banga, Birbhum Special issue (in Bengali), February 2006, pp. 7–10 , Government of West Bengal
  3. Mondal, Dipanwita, Ek Najare Birbhum Jela, Paschim Banga, Birbhum Special issue (in Bengali), February 2006, pp. 7–10 , Government of West Bengal
  4. "West Bengal Wildlife Sanctuaries". Archived from the original on December 22, 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-03-22.