முள்ளிவாய்க்கால் நினைவு தூபி
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி என்பது தமிழீழத்தில் கொல்லப்பட்ட, தமிழீழத்துக்காக உயிர் விட்ட போராளிகள், தியாகிகள், மக்களை நினைவு கூரும் ஒரு தூபி ஆகும். இது இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி | |
---|---|
அமைவிடம் | இலங்கை, யாழ்ப்பாணம் |
வரலாறு
தொகுஇலங்கை உள்நாட்டுப் போரின் ஒரு பகுதியாக 2009ஆம் ஆண்டு நடந்த போரில் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் இறந்த தமிழ் மக்களின் நினைவாக 2019 சனவரியில் இந்த நினைவுத் தூபி அமைக்கப்பட்டது. இந்த பல்கலைக் கழக வளாகத்தில் 2018 இல் அமைக்கப்பட்ட பொங்கு தமிழர் நினைவுதூபி, மாவீரர் நினைவுதூபி என மேலும் இரு நினைவு தூபிகள் உள்ளன.
இந்த நிலையில் இந்த நினைவுத் தூபியானது 2021 சனவரி எட்டாம் நாள் இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது.[1] இதைக் கண்டித்து ஏராளமான பொது மக்களும், மாணவர்களும் பல்கலைக்கழகம் முன்பு போராடத் துவங்கினர். இதற்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.[2] இதையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை மீண்டும் அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதனால் 2021 சனவரி 11ஆம் நாள் அதே இடத்தில் புதியாக நினைவுத் தூபி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தப் பணிகள் முடிந்ததையடுத்து 2021 ஏப்ரல் 23 அன்று இந்நினைவுத் தூபி மாணவர்களால் மீண்டும் திறந்துவைக்கப்பட்டது.[3] [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடிப்பு - யாழ்ப்பாணத்தில் திடீர் பதற்றம், செய்தி, 9 சனவரி 2021 பிபிசி செய்திகள் [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ போலீசாரின் கடும் எதிர்ப்பு- யாழ் பல்லகைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அமைக்க அடிக்கல், செய்தி, 2021 சனவரி 12, ஒன் இந்தியா
- ↑ யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி மீண்டும் திறப்பு, செய்தி, இந்து தமிழ் நாளிதழ், 2021 ஏப்பிரல் 24
- ↑ யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் திறப்பு, செய்தி, 23 ஏப்ரல் 2021 பிபிசி செய்திகள்