முழையூர் தர்மபுரீஸ்வரர் கோயில்
முழையூர் தர்மபுரீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அருகே உள்ள கோயிலாகும். இக்கோயில் வள்ளலார் கோயில் என்றும் வட தளி என்றும் அழைக்கப்படுகிறது.
அமைவிடம்
தொகுகும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் தாராசுரம் சென்று அங்கிருந்து பட்டீச்சரம் சாலையில், சாலை பிரியும் இடத்தில் இடப்புறமாக நேர்ச்சாலையில் சென்றால் முழையூரை அடையலாம். கும்பகோணத்திலிருந்து பேருந்து மூலம் இவ்வூரை அடையலாம்.
பழையாறை
தொகுபழையாறையில் இருந்த 19 கோயில்களில் பல அழிந்துவிட்ட நிலையில் இப்பகுதியில் நான்கு திசைகளிலும் வடதளி, கீழ்த்தளி, மேல்தளி, தென்தளி எனும் கோயில்கள் இருந்தன. [1] அவற்றுள் இப்பகுதி கீழப்பழையாறை வடதளி என்று இவ்விடம் அழைக்கப்படுகிறது.
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலின் மூலவர் தர்மபுரீசுவரர் ஆவார். இறைவி விமலநாயகி ஆவார்.
அமைப்பு
தொகுநுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் மற்றொரு வாயில் உள்ளது. அவ்வாயிலின் மேல் பகுதியில் நடுவில் சிவன் பார்வதியுடன் ரிஷபத்தில் அமர்ந்துள்ள நிலையில் உள்ள சுதைச்சிற்பம் உள்ளது. இவ்வாயிலின் வழியே உள்ளே கோயிலின் இடது புறமாக 12 லிங்கத்திருமேனிகள் காணப்படுகின்றன. அவை மேச லிங்கம், ரிசப லிங்கம், மிதுன லிங்கம், கடக லிங்கம், சிம்ம லிங்கம், கன்னி லிங்கம், துலா லிங்கம், விருச்சிக லிங்கம், கும்ப லிங்கம், மீன லிங்கம் என்று குறிக்கப்பட்டுள்ளன. உயர்ந்த நிலையில் மாடக்கோயில் அமைப்பில் உள்ள தளத்தில் படியில் ஏறி உள்ளே செல்லும்போது மூலவர் மேற்கு நோக்கிய நிலையில் கருவறையில் காணப்படுகிறார். அவருக்கு வலது புறம் இறைவி சன்னதி உள்ளது. இறைவி தெற்கு நோக்கிய நிலையில் உள்ளார். மாடக்கோயில் அமைப்பிலான தளத்தில் உள்ள திருச்சுற்றில் அர்த்தநாரி, துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோர் உள்ளனர். இதே சுற்றில் சண்டிகேசுவரர் சன்னதியும் அப்பர் சன்னதியும் உள்ளது.
குடமுழுக்கு
தொகு13 நவம்பர் 2011 அன்று இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ ஜி.சிவருகு, பழையாறைப் பெருநகர், மகாமகம் 2016 சிறப்பு மலர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், 2016
- ↑ தர்மபுரீசுவரர் கோயிலில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம், தினமலர், 14 நவம்பர் 2011