முஸ்லிம் முரசு (சிற்றிதழ்)

முஸ்லிம் முரசு இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து அரைநூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் மாதாந்த இசுலாமிய சிற்றிதழாகும். இதன் முதல் இதழ் 1948ம் ஆண்டில் வெளிவந்தது.

ஆசிரியர்:

  • இவ்விதழின் முதலாசிரியர் வ. மி. சம்சுதீன்.

இதன் ஆசிரியர்கள் காலத்துக்குக் காலம் மாறியுள்ளனர்.

பணிக்கூற்று தொகு

  • அன்பும் இன்பமும் அறிவும் ஆற்றலும் பண்பும் புகழும் பொலிந்து விளங்க முரசு முழங்கவே

ஆரம்ப இதழ்களில் மேற்படி பணிக்கூற்று முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது.

உள்ளடக்கம் தொகு

சிறுகதைகள், நெடுங்கதைகள், இசுலாமிய ஆக்கங்கள், கவிதைகள் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தியாவில் இசுலாமிய இதழ்களில் குறிப்பிடத்தக்கதோர் இதழாக இது திகழ்ந்தது. இவ்விதழ் இந்தியாவில் மாத்திரமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் பிரபல்யம் பெற்றிருந்தமை அவதானிக்கத்தக்கதொன்றாகும்.