மு. கற்பகம் (M. Karpagam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். முதுநிலைப் பட்டதாரியான இவர், சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூரிலுள்ள சீதாலெட்சுமி மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்து வந்தார். அரசியலில் கொண்ட நாட்டத்தால், தனது பேராசிரியர் பதவியிலிருந்து விலகி 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் காரைக்குடி நகர்மன்றத் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு.கற்பகம்&oldid=3499654" இலிருந்து மீள்விக்கப்பட்டது