மு. இராமலிங்கம்

மு. இராமலிங்கம் (9 அக்டோபர் 1908 - 1 ஆகத்து 1974) ஈழத்து எழுத்தாளரும், வரலாற்றாசிரியரும், நாடகாசிரியரும், நாட்டுப் பாடல் ஆய்வாளரும் ஆவார். முருகரம்மான் என்ற பெயரிலும் எழுதியவர்.[1] மக்கள் கவிமணி என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

மு. இராமலிங்கம்
MuRamalingam.jpg
பிறப்புஅக்டோபர் 9, 1908(1908-10-09)
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
இறப்புஆகத்து 1, 1974(1974-08-01) (அகவை 65)
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம், இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
மற்ற பெயர்கள்முருகரம்மான்
பணியகம்இலங்கை அரச சேவை
அறியப்படுவதுநாட்டாரியல்

வாழ்க்கைக் குறிப்புதொகு

நன்னித்தம்பி முருகேசு இராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட மு. இராமலிங்கம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்தவர். யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்று, இலங்கை இரயில்வே திணைக்களத்திலும், இறைவரித் திணைக்களத்திலும் பணியாற்றியவர்.[2] நாட்டார் இலக்கியம், நாட்டார் பாடல்கள் பற்றி எழுதியும், பாடல்கள் சிலவற்றைத் தொகுத்தும் பல இதழ்களில் எழுதினார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை மிக்கவராகத் திகழ்ந்த இவரின் நாட்டார் வழக்காற்றியல் பற்றிய ஆக்கங்களை தமிழ்நாட்டுப் பத்திரிகைகளும் வெளியிட்டன.[3]

இறைவரித்திணைக்களத்தில் பணியாற்றிய போது கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்தார். வெள்ளவத்தை மு. இராமலிங்கம் என்றே எழுதியவர் ஓய்வு பெற்று யாழ்ப்பாணம் சென்றபின் வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் என்று எழுதி வந்தார். 1943 இல் அசோகமாலா என்ற நாடக நூலை முருகரம்மான் என்ற புனை பெயரில் வெளியிட்டார்.

வெளியிட்ட நூல்கள்தொகு

மு. இராமலிங்கம் இரண்டு நாடக நூல்களையும், நாட்டார் பாடல்கள் பற்றி நான்கு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.[1] இவற்றை விடப் பல நூல்களை தொகுத்து வெளியிட்டுள்ளார்.

  • அசோகமாலா (நாடகம், 1943)
  • நவமணி (நாடகம்)
  • இலங்கை நாட்டுப் பாடல்கள்
  • கிராமக் கவிக்குயில்களின் ஒப்பாரிகள் (1960)
  • வட இலங்கையர் போற்றும் நாட்டார் பாடல்கள்
  • கள்ளக் காதலர் கையாண்ட விடுகதைகள்

தொகுப்பு நூல்கள்தொகு

  • கனகி புராணம் - நட்டுவச் சுப்பையனார் (மூலம்), சிவங். கருணாலய பாண்டியனார் (விரிவுரை), 1961

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 இரசிகமணி கனக செந்திநாதன் (ஆகத்து 1968). "முதன் முதலில் சந்தித்தேன்". மல்லிகை. 
  2. "மக்கள் கவிமணி மு. இராமலிங்கம்". மில்க்வைற் செய்தி. 23 நவம்பர் 1977. 21 பெப்ரவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. தெளிவத்தை ஜோசப் (24 அக்டோபர் 2012). "ஊற்றுக்களும் ஓட்டங்களும்: மீனாட்சியம்மாள் முதல் மார்க்ஸிம் கார்க்கி வரை-விமர்சனம்". இனியொரு. 21 பெப்ரவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._இராமலிங்கம்&oldid=3330447" இருந்து மீள்விக்கப்பட்டது