மு. செல்லையா

அல்வாயூர் கவிஞர் மு. செல்லையா (7 அக்டோபர் 1906 – 9 பெப்ரவரி 1966) 1930-1960 காலகட்ட ஈழத்துக் கவிதைப் பரப்பில் தவிர்க்கமுடியாத ஒரு கவிஞர். இவரது 'வளர்பிறை, 'புதிய வண்டுவிடு தூது' ஆகிய கவிதைகள் மிகவும் குறிப்பிடத்தக்கன.

மு. செல்லையா
1938 இல் மு. செல்லையா
பிறப்பு(1906-10-07)7 அக்டோபர் 1906
அல்வாய், யாழ்ப்பாணம்
இறப்பு9 பெப்ரவரி 1966(1966-02-09) (அகவை 59)
அறியப்படுவதுகவிஞர், தமிழாசிரியர்
சமயம்இந்து

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய்க் கிராமத்தில் 1906.10.07 இல் கவிஞர் மு. செல்லையா பிறந்தார். தமிழாசிரியராக, கவிஞராக, காந்தியவாதியாக, சமூக சீர்திருத்தவாதியாக பல்பரிமாண ஆற்றலுள்ளவராகத் திகழ்ந்தார். தேவரையாளிச் சூரன் சிஷ்யப் பரம்பரையின் முதல் மாணக்கராக இருந்துள்ளார். 1966.02.09 இல் மறைந்தார்.

இலக்கியப் பங்களிப்பு

தொகு

கவிதை, கட்டுரை, இலக்கண இலக்கியம் ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தியுள்ளார். ஈழகேசரி வெளிவந்த காலப்பகுதியில் 'அனுசுயா' என்ற புனைபெயரில் பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். சிறுகதைகள் சிலவற்றையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய பக்திப் பாசுரங்கள் சிறுசிறு பிரசுரங்களாக வெளிவந்துள்ளன. இவர் தலைசிறந்த குழந்தைக் கவிஞர் என்பதை நிறுவுவதற்கு வளர்பிறை தொகுப்பில் உள்ள 'அம்மா வெளியே வா அம்மா' என்ற கவிதை மிகச்சிறந்த சான்றாக அமைந்துள்ளது.

வெளிவந்த நூல்கள்

தொகு
தளத்தில்
மு. செல்லையா எழுதிய
நூல்கள் உள்ளன.
 • அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள் (2018)
 • தேசியகீதம் (1932)
 • கந்தவனநாதர் தோத்திரக் காரிகை (1932)
 • வளர்பிறை (கவிதைத்தொகுப்பு, 1952, 2002)
 • குமாரபுரக் குமரவேள் பதிகம் (1955)
 • முருகமூர்த்தி தோத்திரக் காரிகை (1965)
 • புதிய வண்டுவிடு தூது
 • பரீட்சைக்கேற்ற பாஷைப் பயிற்சி

பெற்ற கௌரவங்கள்

தொகு
 • 1952 ஆம் ஆண்டு வளர்பிறை கவிதை அரங்கேற்றப்பட்டபொழுது நவநீத கிருஷ்ண பாரதியார் 'கவிஞர்' என்ற பட்டத்தை செல்லையா அவர்களுக்குச் சூட்டினார்.
 • இரசிகமணி கனக செந்திநாதன் அவர்களால் 'கவிதை வானில் ஒரு வளர்பிறை' என நூல் நயப்புரையில் பாராட்டப்பெற்றார்.
 • இலங்கை வானொலி நடாத்திய குறுங்காவியப்போட்டியில் வண்டுவிடுதூது முதற்பரிசு தங்கப்பதக்கம் பெற்றது.
 • மல்லிகை இதழ் 1982 இல் செல்லையாவின் அட்டைப்படத்தோடு வெளியாகியது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._செல்லையா&oldid=3386680" இலிருந்து மீள்விக்கப்பட்டது