மு. வெங்கடசுப்பா ராவ்
சர் முத்த வெங்கடசுப்பா ராவ் (M. Venkatasubba Rao)(18 சூலை 1878 - 30 திசம்பர் 1960) என்பவர் இந்திய வழக்கறிஞர், பரோபகாரர், சமூகவாதி மற்றும் நிர்வாகி ஆவார். இவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பேரர் முகவராகவும் பணியாற்றினார்.
இளமையும் கல்வியும்
தொகுவெங்கடசுப்பா ராவ் 1878ஆம் ஆண்டு சூலை 18ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஆகிவீடு கிராமத்தில் பிறந்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
பணி
தொகுதனது கல்வியை முடித்ததும், வெங்கடசுப்பா ராவ் சிவி குமாரசாமி சாத்திரியிடம் இளைய வழக்குரைஞராக பயிற்சிபெற்றார். 1903ஆம் ஆண்டில், இவர் சொந்தமாகப் பயிற்சி செய்யத் தொடங்கினார் மற்றும் 1 நவம்பர் 1921 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் பியூஸ்னே நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் ஆனார்.[1]