க. வீ. குமாரசாமி சாத்திரி
திவான் பகதூர் சர் கலமூர் வீரவள்ளி குமாரசாமி சாத்திரி(19 ஜூலை 1870 - 24 ஏப்ரல் 1934) என்பவர் இந்திய வழக்கறிஞர் மற்றும் சமசுகிருத அறிஞர் ஆவார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றினார். புகழ்பெற்ற வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான சே. ப. இராமசுவாமி ஐயருடைய மைத்துனர் ஆவார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகுமாரசாமி சாத்திரி, சி.வி.சுந்தர சாத்திரியின் மூத்த மகனாக 1870-ல் சென்னையில் பிறந்தார்.[2] குமாரசாமி சாத்திரி, பன்மொழிப் புலமைபெற்ற சி. வி. இரகுநாத சாத்திரியின் பேரன் ஆவார். ஆரம்பக்காலத்தில் சென்னை சட்ட மேலவையில் உறுப்பினராக இருந்த இந்தியர்களில் இவரும் ஒருவர்.[2] இவருக்கு மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி, சீத்தம்மாள் இருந்தனர். இவரது சகோதரி சர் சே. ப. ராமசாமி ஐயரை மணந்தார்.
குமாரசாமி சாத்திரி, சென்னை, மாநிலக் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். இங்கு இவர் எல்பின்ஸ்டோன் தாம்சன் மற்றும் மோர்ஹெட் சட்ட உதவித்தொகையினைப் பெற்றார். இன்னசு பதக்கத்தையும் வென்றார்.[2]
தொழில்
தொகுசாத்திரி 1894ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு வழக்கறிஞர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[3] வழக்கறிஞராகப் பணியாற்றிய பிறகு, சாத்திரி இறுதியில் சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்தின் நீதிபதியானார்.[2] 1911-ல் பர்ஹம்பூர் மாவட்ட நீதிபதி பணியாற்றினார். இவருக்கு "திவான் பகதூர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.[2]
1914-ல், சாத்திரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[3] இவர் ரவுலட் சட்டம் என்றும் நீதிபதி ரவுலட்டின் கீழ் ரவுலட் குழஎன்று அழைக்கப்படும் ரெளலட் குழுவில் உறுப்பினராக இருந்தார். 1924ஆம் ஆண்டு புத்தாண்டு விருது பெற்றார்.[4]
இறப்பு
தொகுசாத்திரி 1934ஆம் ஆண்டு சென்னையில் தனது 63ஆவது அகவையில் மரணமடைந்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Obituary: Sir Kumaraswami Sastri". தி டைம்ஸ்: p. 9. 25 April 1934.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Bhargava, Prag Narain (1912). Supplement of Who's who in India. Lucknow: Newul Kishore Press. p. 72.
- ↑ 3.0 3.1 Yves Dezalay; Bryant G. Garth (2010). Asian Legal Revivals: Lawyers in the Shadow of Empire. University of Chicago. p. 71.
- ↑ The London Gazette, 1 January 1924