மூக்கரட்டி சாரை
மூக்கரட்டி சாரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. diffusa
|
இருசொற் பெயரீடு | |
Boerhavia diffusa L nom. cons.[1] |
மூக்கரட்டி சாரை அல்லது மூக்கிரட்டை (Boerhavia diffusa) என்ற இந்த தாவரம் ஒரு பூக்கும் தாவரம் மூலிகை தாவரம் ஆகும்.மூலிகை மருத்துவத்தில், சீறுநீரகப் பிரச்சனைக்களுக்கு இதன் இலைகள் பயன்படுகிறது.[2] இந்த வகைச்செடிகள் இந்தியா மட்டுமின்றி பசுபிக் பகுதி, தென் அமெரிக்காவின் பலபகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.[3] இந்தியாவில் இதன் இலைகளை மூலிகைகளாகப் பயன்படுத்துகின்றார்கள். மழை இன்றி வறண்டு இருக்கும்போதும், மூக்கிரட்டை முளைத்திருப்பதைக் காண இயலும். வயல்களில் அல்லது காடுகளில் மட்டுமல்லாமல் சாலை ஓரத்தில்கூடப் படர்ந்து காணப்படும்.
பெயர்கள்
தொகுஇது புட்பகம், மூக்குறட்டை, மூக்கிரட்டை ஆகிய வேறுபெயர்களைக் கொண்டும் அழைக்கப்படுகிறது வருகிறது. சிறிது செம்மை கலந்த ஊதா நிறத்தில் மலர்வதால் ‘ரத்த’ புட்பிகா எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். உடலுறுப்புகளின் செயல்பாடுகளைப் புதுப்பிக்கும் தாவரம் என்பதால், ‘புனர்நவா’ என்ற பெயரையும் (புனர்-மீண்டும்; நவா-புதிது) கொண்டுள்ளது.
விளக்கம்
தொகுஇந்தத் தாவரம் தரையோடு படர்ந்து வளரக்கூடியது ஆகும். இதன் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும். இலைகளின் மேற்புறம் அடர்ந்த பச்சை நிறமாகவும், கீழ்புறம் சற்று வெளுத்தும் காணப்படும். வேர்கள் சற்றுத் தடிமனாகப் பூமிக்குள் மறைந்திருக்கும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Boerhavia diffusa was originally described and published in Species Plantarum 1:3. 1753.
- USDA, ARS, GRIN. மூக்கரட்டி சாரை in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம். Accessed on March 14, 2013.
- ↑ Bhowmik, Debjit, K. P. Sampath Kumar, Shweta Srivastava, Shravan Paswan, Amit Sankar, and Dutta Dutta. "Traditional Indian Herbs: Punarnava and Its Medicinal Importance." Journal of Pharmacognosy and Phytochemistry 1.1 (2012): 52-57. Web. 12 Nov. 2014.
- ↑ Sherwin Carlquist (2008). "Dispersal to Islands". Plant Discorveries : Sherwin Carlquist. பார்க்கப்பட்ட நாள் March 13, 2013.
- ↑ டாக்டர் வி.விக்ரம் குமார் (14 செப்டம்பர் 2018). "மூக்கிரட்டை... நலத்துக்கான ராஜபாட்டை!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 15 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)