மூடுபாடம்
மூடு பாடம் (Moodupadam) என்பது இராமு கரியத் இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி திரைப்படமாகும். பிரபல எழுத்தாளர் எஸ். கே. பொட்டெக்கட் இதே பெயரில் எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு கே. டி. முகம்மது திரைக்கதை அமைத்திருந்தார். சத்யன் மற்றும் அம்பிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இது கேரளாவில் உள்ள மூன்று முக்கிய மத நம்பிக்கைகளான இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மதங்களுக்கு இடையிலான உறவைப் பற்றிய ஒரு சமூகப் படம் ஆகும்.
மூடுபாடம் | |
---|---|
இயக்கம் | இராமு கரியத் |
தயாரிப்பு | ட். கே. பரிக்குட்டி |
கதை | எஸ். கே. பொட்டெக்கட் (கதை) கே. டி. முகம்மது ( திரைக்கதை & வசனம்) கை. பத்மநாபன் நாயர் (வசனம்) |
இசை | பாபுராசு |
நடிப்பு | சத்யன் அம்பிகா |
ஒளிப்பதிவு | அ. வின்சென்ட் |
படத்தொகுப்பு | ஜி. வெங்கட்ராமன |
கலையகம் | சந்திரதாரா புரடக்சன்ஸ் |
விநியோகம் | சந்திரதாரா பிக்சர்ஸ |
வெளியீடு | 12 ஏப்ரல் 1963 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ஒலிப்பதிவு
தொகுபாபுராசு இசையமைத்த இப்படத்திற்கு பு. பாஸ்கரன் மற்றும் இயூசூப் அலி கேச்சேரி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Moodupadam 1963". தி இந்து. 20 May 2012. http://www.thehindu.com/features/cinema/moodupadam-1963/article3436424.ece. பார்த்த நாள்: 14 February 2014.
வெளி இணைப்புகள்
தொகு- Moodupadam at the Malayalam Movie Database