முகமது சபீர் பாபுராசு (Mohammad Sabir Baburaj) எம். எஸ். பாபுராசு என்றும் அழைக்கப்படும் இவர், மலையாளத் திரையுலகில் இசை அமைப்பாளராக இருந்தார். மலையாளத் திரைப்பட இசையின் மறுமலர்ச்சிக்கு இவர் பெரும்பாலும் வரவு வைக்கப்படுகிறார்.[1] பல பசுமையான மலையாளத் திரைப்பட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.[2]

எம். எஸ். பாபுராசு
இயற்பெயர்முகமது சபீர் பாபுராசு
பிற பெயர்கள்பாபுராசு, பாபுக்கா
பிறப்பு(1929-03-09)9 மார்ச்சு 1929
கோழிக்கோடு, கேரளம், இந்தியா
இறப்பு7 அக்டோபர் 1978(1978-10-07) (அகவை 49)
இசை வடிவங்கள்திரையிசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடகர், இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம்
இசைத்துறையில்1957–1978

ஆரம்ப ஆண்டுகளில்

தொகு

பாபுராஜ் 1929 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி கோழிக்கோட்டில் பிறந்தார். இவரது ஆரம்பகாலம் வறுமையில் கழிந்தது. இவரது தந்தை ஜான் முகம்மது கான், வங்காளத்தைச் சேர்ந்த இந்துஸ்தானி இசைக்கலைஞராக இருந்தார். அவர் அடிக்கடி கேரளாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பாபுவின் இளம் வயதிலேயே தனது மலையாளி மனைவியை விட்டு வெளியேறி, தனது சொந்த ஊரான கொல்கத்தாவுக்கு திரும்பினார். பின்னர், பாபு பெரும்பாலும் தொடர்வண்டிகளில் பாடல்களைப் பாடி வந்தார். இவரது சொந்த ஊரான கோழிக்கோட்டிலிருந்த இசை ஆர்வலரான குஞ்சு முகம்மது சிறுவனின் குரல் திறமையைக் கவனித்து, இவரை தத்தெடுத்து வளர்த்தார்.[3][4]

இசை வாழ்க்கை

தொகு

மலையாளத்தின் பிரபலமான இசையில் இந்துஸ்தானி பாணிகளை அறிமுகப்படுத்தியது, இவரது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும். இந்துஸ்தானி இராகங்களை அடிப்படையாகக் கொண்ட மெல்லிசைகளை வெற்றிகரமாக இயற்றினார். மேலும் அவற்றில் மலையாள வரிகளை இணைத்தார். பெரும்பாலான பாடல்களை பு. பாஸ்கரன், வயலார் ராமவர்மா போன்ற பிரபல மலையாள கவிஞர்கள் எழுதியிருந்தனர்.[5]

இவர், தனது தந்தையிடமிருந்து இந்துஸ்தானி இசையின் அடிப்படை பாடங்களை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொண்டார். பின்னர், மேற்கு வங்காளம், மும்பை ,இலங்கைக்குச் சென்றார். இந்த காலகட்டத்தில் ஆர்மோனியம் வாசிக்க கற்றுக்கொண்டார்.

இவர் மீண்டும் கேரளாவுக்கு திரும்பி தனது வாழ்வாதாரத்திற்காக கோழிக்கோடு தெருக்களில் பாடினார். இவரது தந்தையின் இரசிகராக இருந்த காவலர் குஞ்சு முகம்மது,[6] இவரை தத்தெடுத்து வளர்த்தார்.

பின்னர் மலபார் பிரதேசத்தில் மலையாள நாடகங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். 1957 ஆம் ஆண்டில், இராமு கரியத் எழுதிய மலையாளத் திரைப்படமான மின்னாமினுங்கு என்றப் படத்துக்கு இசையமைத்ததன் மூலம் திரையுலைகில் நுழைந்தார். பின்னர் இயக்குநர் பி.வேணுவுடன் இணைந்து பணியாற்றிய இவர், உத்யோகஸ்தா (1967) படத்திற்காக "அனுராக கானம் போலே", "எழுதியதாரானு சுஜாதா", "கலிச்சிரி மாறாத பெண்ணே" போன்ற உன்னதமான பாடல்களை இயற்றினார்.

பாபுராஜ் 1978 அக்டோபர் 7 அன்று தனது 49 வயதில் சென்னையில் காலமானார். அவரது மரணம் உள்ள ஒரு பொது மருத்துவமனையில் நிகழ்ந்தது. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர்.

கௌரவம்

தொகு

பாபுராஜ் - பு. பாஸ்கரன் - கே. ஜே. யேசுதாஸ் கலவையானது 1960கள் - 1970களில் மறக்கமுடியாத பல மலையாள பாடல்களை உருவாக்கியது. இவரது உன்னதமான பாடல்களில் பெரும்பாலானவை கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி ஆகியோரால் பாடப்பட்டன. இவரது பல பாடல்கள் கேரளாவில் மிகவும் பிரபலமாக உள்ளன, "ஒரு புஷ்பம் மாத்ரம்" போன்ற பாடல்கள் பல்வேறு நிகழ்வுகளில் மேடையில் அடிக்கடி பாடப்படுகின்றன.[7][8][9]

மலையாள மனோரமா நிறுவனத்தின் "மனோரமா மியூசிக்" என்ற நிறுவனம் இவர் நண்பர்களிடையே மேடையில் பாடிய பழைய பாடல்களை வழங்கியது. 'பாபுராஜ் பாடுன்னு' என்ற இசைதட்டு வெளியிடப்பட்டு உடனடி வெற்றி பெற்றது.[10] இந்தப் பாடல்கள் கேரளாவுக்கு இவரது இசையின் புத்துணர்ச்சியூட்டும் சுவை அளித்தன.[11] ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளர் என்றாலும், இவர், ஒருபோதும் தொழில் வாழ்க்கையாளராக இருக்கவில்லை. ஆனால் தனது கலையில் கவனம் செலுத்தினார். இன்று, பல்வேறு சங்கங்களும், இசை அமைப்புகளும் இவரது நினைவாக மேடை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன (நண்பர்களாலும், அறிமுகமானவர்களாலும் இவர் "பாபூக்கா என அன்பாக அழைக்கப்பட்டார்) [12]). இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை இவரது குடும்பத்திற்கு வழங்குகின்றன. இவரது காலத்தில், கலைஞர்களுக்கு பணம் கிடைப்பது எளிதல்ல.[13] இவரால் ஒருபோதும் சம்பாதிக்க முடியாமல் வறுமையில் இறந்தார். ஹரிஹரன் இயக்கிய 1978 ஆம் ஆண்டு வெளியான யாகஸ்வம் திரைப்படத்தில் "திரிக்காக்கரே தீர்த்தக்கரே" இவரது கடைசியாக பதிவு செய்யப்பட்ட பாடல்.[14]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Magic of Baburaj". The Hindu. 30 April 2005 இம் மூலத்தில் இருந்து 10 October 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111010161158/http://www.hindu.com/mp/2005/04/30/stories/2005043002330300.htm. 
  2. "'Pattupetti' tunes in to Baburaj". The Hindu. 27 October 2008 இம் மூலத்தில் இருந்து 2 December 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081202070718/http://www.hindu.com/2008/10/27/stories/2008102751120200.htm. 
  3. asianetnews (6 October 2012), Interview : VT Muralai (In memory of the late music director M.S. Baburaj), archived from the original on 11 October 2020, பார்க்கப்பட்ட நாள் 27 September 2017
  4. Ibrahim Haroon (8 May 2010), M.S. Baburaj, The Mind and the Mith – part 1, பார்க்கப்பட்ட நாள் 27 September 2017
  5. "Baburaj Mehfil to enthral music buffs". The New Indian Express. 22 May 2009. http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Baburaj+Mehfil+to+enthral+music+buffs&artid=iiaBO9BOwIU=&SectionID=9R67TMeNb/w=&MainSectionID=9R67TMeNb/w=&SEO=Baburaj,+Firoz+Babu,+Prathibha&SectionName=gUhH3Holuas=. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. Kumar, P. K. Ajith (10 May 2016). "Baburaj, through his wife's eyes". The Hindu இம் மூலத்தில் இருந்து 10 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160510010007/http://www.thehindu.com/news/cities/kozhikode/baburaj-through-his-wifes-eyes/article8578151.ece. 
  7. abdul khaise (16 March 2011), MS Baburaj Original Voice.flv, archived from the original on 23 November 2017, பார்க்கப்பட்ட நாள் 27 September 2017
  8. Mathrubhumi Kappa TV (23 February 2017), Oru Pushpam – Akshaynath & Rishikesh – Moodtapes – Kappa TV, archived from the original on 11 October 2020, பார்க்கப்பட்ட நாள் 27 September 2017
  9. nithyajith (29 June 2009), Idea Star Singer Season 4 Danny Oru pushpam mathram, archived from the original on 11 October 2020, பார்க்கப்பட்ட நாள் 27 September 2017
  10. Baburaj Paadunnu, 1 January 2005, archived from the original on 28 September 2017, பார்க்கப்பட்ட நாள் 27 September 2017
  11. Nair, Malini. "How Kerala came to embrace the unfamiliar musical genre of ghazals". Scroll.in. Archived from the original on 20 December 2018. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
  12. "A journey in search of M.S. Baburaj". The Hindu. 22 August 2006 இம் மூலத்தில் இருந்து 24 October 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081024050517/http://www.hindu.com/2006/08/22/stories/2006082201490200.htm. 
  13. "Yesudas offers help to composer Baburaj's widow". The Times of India. Archived from the original on 3 March 2017. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
  14. "Archived copy". Archived from the original on 10 May 2016. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

குறிப்புகள்

தொகு

ബാബുരാജ് കരഞ്ഞു; വേദനയില്‍ അവസാനത്തെ ഈണം പിറന്നു... Baburaj, through his wife’s eyes baburaj chudukanneeralen jeevithakatha : Editor:Mustafa Desamangalam : 9788187474753 : Read @ JustBooksclc. ചുടുകണ്ണീരാലെന്‍ ജീവിതകഥ

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபுராசு&oldid=4166925" இலிருந்து மீள்விக்கப்பட்டது