பு. பாஸ்கரன்
பு. பாஸ்கரன் (ஆங்கிலம்: P. Bhaskaran) (21 ஏப்ரல் 1924 - 25 பிப்ரவரி 2007) புல்லூற்றுப்பாடத்து பாஸ்கரன் என்கிற இவர் ஒரு மலையாளக் கவிஞரும், பாடலாசிரியரும், மலையாளத் திரைப்பட இசையமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமாவார். இவர் சுமார் 250 படங்களுக்கு 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் 44 மலையாள திரைப்படங்களையும் 3 ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். 6 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இவர் செய்த ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக, இவருக்கு கேரள அரசு ஜே.சி. டேனியல் விருது வழங்கியது.
பு. பாஸ்கரன் | |
---|---|
திருவனந்தபுரத்தில் பாஸ்கரனின் மார்பளவு சிலை | |
பிறப்பு | கொடுங்ஙல்லூர், திருச்சூர் மாவட்டம், கொச்சி இராச்சியம் | 21 ஏப்ரல் 1924
இறப்பு | 25 பெப்ரவரி 2007 திருவனந்தபுரம்,கேரளா, இந்தியா | (அகவை 82)
தொழில் | கவிஞர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், நடிகர், பத்திரிகையாளர் |
துணைவர் | இந்திரா |
குடும்பத்தினர் | நந்திலத்து பத்மநாப மேனன் (தந்தை) புல்லூற்றுப்பாடத்து அம்மாளு அம்மா (தாயார்) |
இணையதளம் | |
pbhaskaran |
திரையுலகில் சுறுசுறுப்பாக பணியாற்றுவதற்கு முன்பு பத்திரிகையாளராகவும் அகில இந்திய வானொலி ஊழியராகவும் இருந்துள்ளார். இவர் தனது பாடல்களிலும் கவிதைகளிலும் மொழியை எளிமையாகப் பயன்படுத்துவதில் நன்கு அறியப்பட்டவர்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபு. பாஸ்கரன் 1924 ஏப்ரல் 21 அன்று திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கல்லூரில் பிறந்தார். இவரது தந்தை நந்திலத்து பத்மநாப மேனன் ஒரு கவிஞரரும், வழக்கறிஞரும், பத்திரிகையாளரும், இந்திய சுதந்திர ஆர்வலருமாவார் . இவரது தாயார் புல்லூற்றுப்பாடத்து அம்மாளு அம்மா என்பவாராவார். பாஸ்கரன் தனது பெற்றோர்களின் ஒன்பது பிள்ளைகளில் ஆறாவது பிள்ளையாவார். ஐந்தாம் வகுப்பில் படிக்கும் போது இவரது தந்தை இறந்தார்.[1] ஏழாம் வகுப்பில் படிக்கும் போது கவிதை எழுதத் தொடங்கினார். எர்ணாகுளம் மகாராஜாவின் கல்லூரியில் படித்தார். இவர் ஒரு உள்ளூர் பத்திரிகையில் கவிதை எழுதினார். ஆகஸ்ட் போராட்டத்தில் பங்கேற்றதற்காக, இவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. விடுதலையான பிறகு, கோழிக்கோடு சென்று தேசாபிமானி வார இதழில் சேர்ந்தார்.
வாழ்க்கை
தொகுபு. பாஸ்கரன் கம்யூனிச மேடை கலைஞர்களுக்கு பாடல்களை எழுதத் தொடங்கினார். இவரது பாடல்கள் (அப்போதைய) திருவிதாங்கூர் மாநிலத்தில் தடை செய்யப்பட்டன. இவரது முதல் கவிதைத் தொகுப்பு வில்லாளி என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது . புன்னப்பாறா-வயலார் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியின் போது, இவர் இரவி என்ற புனைப் பெயரில் வயலார் கர்ஜிக்குன்னு (வயலார் கர்ஜனை செய்கிறார்) என்ற பாடலை எழுதினார். "உயரம் ஞான் நடக்கே ..." பிறகு வரவிருக்கும் நாட்களில் புகழ்பெற்று அந்தஸ்துக்கு உயர்ந்தது. அந்த சமயத்தில் பாடல் தடைசெய்யப்பட்டது . திவான் சி.பி. ராமசாமி ஐயரின் உத்தரவின்படி இவர் (அப்போதைய) திருவிதாங்கூர் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பின்னர் ஜெயகேரளத்தின் ஆசிரியர் குழுவில் சேர சென்னை சென்றார் . இவர் அனைத்திந்திய வானொலி நிலையத்திற்கு பாடல்களை எழுது வந்தார். அது கோழிக்கோடு அனைத்திந்திய வானொலி நிலையத்தில் வேலை பெற உதவியது. 1950களில், இவர் திரைத்துறையுடன் தொடர்பு கொண்டார். வானொலி நிலையத்தில் தனது வேலையை விட்டுவிட்டு முழுநேர திரைப்பட வாழ்க்கையைத் தொடங்க மீண்டும் சென்னை சென்றார். மலையாள தொலைக்காட்சி ஒளிபரப்பு அலைவரிசையான ஏசியாநெட்டின் கருப் பாடலான சியாமா சுந்தரா என்று தொடங்கும் பாடல் இவரால் எழுதப்பட்டது.
திரைப்பட வாழ்க்கை
தொகுபாடலாசிரியராக பு. பாஸ்கரன் அறிமுகமானது ஒரு தமிழ்ப் படத்திற்காக . அபூர்வ சகோதரர்கள் (1949) என்றத் திரைப்படத்தில் பல மொழி பாடலுக்காக மலையாள வரிகளை எழுதினார். இவர் எழுதிய முதல் மலையாள திரைப்பட பாடல் சந்திரிகா (1950) படத்திற்கு "மாதுமுறி ..." என்ற பாடலாகும் . இவர் இயக்குநர் பி வேணுவுடன் பணியாற்றி விருதன் சங்கு (1968), விருந்துகாரி (1969), அறியப்படாத ரகசியம் (1981) போன்ற படங்களில் பணியாற்றினார். இவர்கள் கூட்டணியில் சில பசுமையான பாடல்கள் உருவாகின.
1954 ஆம் ஆண்டில், பாஸ்கரன், ராமு காரியத்து என்பவருடன் இணைந்து நீலக்குயில் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மலையாள சினிமாவில் சமூக யதார்த்தத்தை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இது குடியரசுத்தலைவரின் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது. இது ஒரு மலையாள படத்திற்கான முதல் தேசிய அங்கீகாரமாகும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தனது முதல் தனிப்படைப்பான இரரிச்சன் என்ன பௌரன் என்ற தலைப்பில் இயக்கினார். இது திரையரங்க வசூலில் தோல்வியடைந்தது. இவரது படங்களான ஆத்யகிரணங்கள் (1964), இருட்டின்றெ ஆத்மாவு (1969), துறக்காத்தா வாதில் (1971) ஆகியவை பல்வேறு பிரிவுகளுக்கான தேசிய திரைப்பட விருதுகளை வென்றன. இவர் நீலக்குயில் உட்பட பல படங்களிலும் நடித்துள்ளார். ஜோதிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட கண்டிப்பான குடும்பத் தலைவராக மனோரதம் (1978) என்றத் திரைப்படத்தில் தோன்றினார். விருது பெற்ற வள்ளத்தோள் உட்பட பல ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார்.
இறப்பு
தொகுபாஸ்கரன் தனது வாழ்நாளின் இறுதியில் அல்சைமர் நோயால் அவதிப்பட்டார். இவருடன் பணிபுரிந்த எவரையும் அடையாளம் காண முடியவில்லை. இரண்டு குறிப்பிடத்தக்க அனுபவங்கள் இசை இயக்குநர் எம்.கே. அர்ஜுனன், இவரின் முதல் திரைப்படப் பாடல்கள் இவரால் எழுதப்பட்டவை. இவர் எழுதிய பெரும்பாலான பாடல்களைப் பாடிய பாடகர் எஸ்.ஜானகி ( கே.ஜே. யேசுதாஸுடன் ). இவர் கடைசியாக பாடல் எழுதியது 2003 இல் வெளியான 'சௌதாமினி'. இவர் 2007 பிப்ரவரி 25 அன்று திருவனந்தபுரத்தில் தனது 83 வயதில் இறந்தார். இவர் தைக்காட்டு சாந்திகவாடம் என்ற இடத்தில் முழு மாநில மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டார். இவருக்கு இந்திரா [2] என்ற மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர்.
விருதுகள்
தொகு- கேரள சாகித்ய அகாடமி விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-08. பார்க்கப்பட்ட நாள் 2019-12-22.
- ↑ http://madhyamam.com
- ↑ "2nd National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 23 August 2011.
- ↑ "6th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 20 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 3 September 2011.
குறிப்புகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பு. பாஸ்கரன்
- MSI Listing பரணிடப்பட்டது 2010-03-03 at the வந்தவழி இயந்திரம்