தேசாபிமானி (மலையாள இதழ்)
தேசாபிமானி என்பது இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மலையாளத்தில் வெளியாகும் நாளேடு. இது 9 அச்சுப் பதிப்புகளையும் ஒரு இணையப் பதிப்பையும் கொண்டுள்ளது. தொழிலாளரின் குரலாகவும், ஆதரவற்றோர்க்காக குரலெழுப்பியும் வந்ததாக அறியப்படுகிறது. தம் தகவலை எவரும் பயன்படுத்த உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்சு முறையினை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தும் ஒரே மலையாள நாளேடு இது..[1]
வகை | நாளேடு |
---|---|
உரிமையாளர்(கள்) | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேரள மாநிலக் குழு |
தலைமை ஆசிரியர் | வி. வி. தட்சிணாமூர்த்தி |
நிறுவியது | 1942 |
அரசியல் சார்பு | கம்யூனிசம் |
மொழி | மலையாளம் |
தலைமையகம் | கொச்சி, கேரளம் |
இணையத்தளம் | desabhimani.com |
காலக்கோடு
தொகு- செப்டம்பர் 6, 1942 - கோழிக்கோட்டில் தொடக்கம்
- டிசம்பர் 16, 1951, இடைக்காலத் தடைபட்டது, மீண்டும் தொடங்கப்பட்டது
- மே 16, 1968 - இரண்டாம் பதிப்பு - கொச்சியில்
- ஜனவரி 4, 1989 - மூன்றாம் பதிப்பு - திருவனந்தபுரத்தில்
- ஜனவரி 30, 1994 - நாலாம் பதிப்பு - கண்ணூரில்
- மார்ச்ச் 22, 1992 - கோட்டயத்தில் ஐந்தாம் பதிப்பு
- ஜனவரி 1, 1998 இணையப் பதிப்பு
- செப்டம்பர் 1, 2000 திருச்சூர் ஆறாம் பதிப்பு
- [[|பஹ்ரைன்|பஹ்ரைனில்]] ஏழாம் பதிப்பு
- டிசம்பர் 28 2009 - பெங்களூரில் எட்டாம் பதிப்பு[2]
- ஜனவரி 17 2010 - மலப்புறத்தில் ஒன்பதாம் பதிப்பு[3]
துணை இதழ்கள்
தொகு- தேசாபிமானி வாராந்திரப் பதிப்பு
- அட்சரமுற்றம்
- ஸ்த்ரீ
- கிளிவாதில்
சான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-06. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06.
- ↑ "Sections of media work for corporate interests" (in English). The Hindu இம் மூலத்தில் இருந்து 2010-01-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100117021941/http://www.hindu.com/2009/12/29/stories/2009122961230400.htm. பார்த்த நாள்: 22 ஏப்ரல் 2010.
- ↑ "Malappuram edition of Deshabhimani launched" (in English). Expressbuzz. http://expressbuzz.com/States/Kerala/malappuram-edition-of-deshabhimani-launched/140321.html. பார்த்த நாள்: 22 ஏப்ரல் 2010.[தொடர்பிழந்த இணைப்பு]