மூன்றாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை என்பது பெயர்ச்சொல்லின் பொருளை கருவியாகவும் கருத்தாகவும்(வினை முதல்) உடனிகழ்வாகவும் வேறுபடுத்தும் வேற்றுமை ஆகும்
“ | "மூன்றா வதன் உருபு ஆல்ஆன் ஒடுஓடு | ” |
மூன்றாம் வேற்றுமை உருபுகள்
தொகு- மூன்றாம் வேற்றுமை உருபுகள்
- ஆல்
- ஆன்
- ஒடு
- ஓடு என்பனவாகும்.
"ஆல்","ஆன்" என்ற உருபு கருவிப்பொருளுக்கும் கருத்தாப் பொருளுக்கும்: "ஒடு", "ஓடு" எனும் உருபுகள் உடனிகழ்ச்சி பொருளுக்கும் பெரும்பாலும் உரியனவாய் வரும்.
கருவிப்பொருள்
தொகுகருவி என்பது பொருளை செய்வதற்கு துணை செய்யும்.
- சான்று:
- "அரிவாளால் வெட்டினான்."
- "அறத்தான் வருவதே இன்பம்."
=== கருவி
என இருவகைப் படும்.
முதற்கருவி
தொகுமுதற்கருவியாவது செயலாக மாறி அதனின்று வேறுபடாமல் நிற்கும்.
சான்று:
- "மண்ணால் குடத்தை வனைந்தான்"
மண் என்பது இங்கு முதற்கருவி.
துணைக்கருவி
தொகுதுணைக்கருவியாவது முதற்கருவி செயல்படும் வரை அதற்குத்துனையாய் நின்று, பின்பு பிரிவது.
சான்று:
- "தண்டச் சக்கரங்களாற் குடத்தை வனைந்தான்."
தண்டச் சக்கரங்கள் என்பது இங்கு துணைக் கருவியாகும்.
== கருத்தாப் பொர
உடனிகழ்ச்சிப் பொருள்
தொகுவினை கொண்டு முடிகிற பொருளை தன்னிடத்தும் உடன் நிகழ்கிறதாக உடையது உடனிகழ்ச்சி ஆகும்.
சான்று:
- "தாயொடு சேயும் வந்தாள்"]
இத்தொடரில் "சேய்" என்பது வினை கொண்டு முடிகிற பொருள்; "வருதல்" என்பது தொழில். அத்தொழிலைத் தன்னிடத்தும் உடன் நிகழ்த்துகிற பொருள் "தாய்"; எனவே இது உடனிகழ்ச்சிப் பொருள் எனப்படும்.
சொல்லுருபுகள்
தொகுசொல்லாக நின்று பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்துவன சொல்லுருபு எனப்படும். மூன்றாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள்: கொண்டு, உடன் ஆகியன.
சான்று:
- "வாள்கொண்டு வெட்டினான்." - கொண்டு என்ற சொல்லுருபு கருவிப்பொருளுக்கு வந்தது.
- "ஆசிரியருடன் மாணவன் வந்தான்." - உடன் என்ற சொல்லுருபு உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது.
குறிப்புகள்
தொகுஉசாத்துணை
தொகு- நன்னூல் விருத்தியுரை. சிவஞான முனிவர் விளக்கம். கழக வெளியீடு.
- தொல்காப்பியம். சொல்லதிகாரம் - சேனாவரையம்.