மூன்று அடிப்பறக் கோடுகள்

மூன்று அடிப்பறப்புகள் அல்லது மூன்று அடிப்பறக் கோடுகள் triple bottom line (TBL) என்பது கணக்கியலில் உள்ள மூன்று பகுதிகளாக சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நிதி ஆகியவைகளை கொண்டு கூறப்பட்ட ஒரு கோட்பாடு. சில நிறுவனங்கள் தங்களது செயல்திறனை மதிப்பிடுவதற்கு TBL கட்டமைப்பை செயல்படுத்தி ஒரு பரந்த பார்வையில் தங்கள் செயல்திறனை மதிப்பீடு செய்து அதிக வணிக மதிப்பை உருவாக்குகின்றன.[1]  வணிக எழுத்தாளர் ஜான் எல்கிங்டன் 1994 ஆம் ஆண்டில் இந்த சொற்றொடரை தான் உருவாக்கியதாகக் கூறுகிறார்.[2][3]

மூன்று வகையான அடிப்பறப்புகள் பற்றிய வரைபடம்

பின்னணி தொகு

பாரம்பரிய வணிகக் கணக்கியல் மற்றும் பொதுவான பயன்பாட்டில், "அடிக்குறிப்பு" என்பது "இலாபம்" அல்லது "இழப்பு (நட்டம்)" என்று குறிக்கிறது, இது வருவாய் மற்றும் செலவினங்களின் அறிக்கையின் அடிப்படையில் மிகவும் கீழ்மட்ட வரிசையில் பதிவு செய்யப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் மற்றும் சமூக நீதித்துறை வழக்கறிஞர்கள் முழு செலவினக் கணக்கை அறிமுகப்படுத்துவதன் மூலம் பொது ஆதரவின் அடிப்படையில் அடிமட்ட வரிகளை பரந்த வரையறைக்குள் கொண்டுவர போராடினர். உதாரணமாக, ஒரு நிறுவனம் ஒரு பண்முறை சார்ந்த பண லாபத்தை காண்பிக்கிறது, ஆனால் அவர்களின் கல்நார் சுரங்கத்தினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இறப்புக்களை ஏற்படுத்துகிறது, மற்றும் அந்த நிறுவனத்தின் செப்புச் சுரங்கம் ஒரு ஆற்றை மாசு படுத்துகிறது, அரசாங்கம் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நதி சுத்திகரிப்பு மீது வரி செலுத்துவோர் பணத்தை செலவழிக்கிறது. இதன்மூலம் எப்படி முழு சமூக செலவின பயன் பகுப்பாய்வு செய்ய முடியும்?

மூன்று அடிப்பறக் கோடுகளுடன் இன்னும் இரண்டு கோடுகளை சேர்க்கிறது: அவை சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் (சுற்றுச்சூழல்) குறித்த கவலைகள்.[4] 2007 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நகர்ப்புற மற்றும் சமூக கணக்கீட்டிற்கான ஐ.நா. மற்றும் ICLEI தரநிலையின் ஒப்புதலுடன்,[5] இந்த முறையானது (TBL) பொதுத் துறை முழு செலவினக் கணக்கியலுக்கான மேலாதிக்க அணுகுமுறையாக மாறியது. இதே போன்று ஐ.நா. தரங்கள், இயற்கை மூலதனம் மற்றும் மனித மூலதனம் பற்றிய அளவீடுகள் TBL பற்றிய அளவீடு செய்வதற்கு உதவும். எ.கா. சுற்றுச்சூழல் தட அறிக்கை தயாரிப்பதற்கு தேவைப்படும் பசுமை திட்டத்தின் தரநிலை. தென்னாப்பிரிக்க ஊடகங்களில் TBL இன் பயன்பாடு மிகவும் பரவலாக உள்ளது, இது உலகளாவிய தேசிய செய்தித்தாள்கள் பற்றிய 1990–2008 ஆய்வுகளில் காணப்பட்டது.[6]

வரையறை தொகு

1987 ஆம் ஆண்டுவாக்கில் ஐ.நா அமைத்த பிரிண்ட்டவுண்ட் ஆணையத்தால் நிலையான வளர்ச்சி குறித்த வரையறை நிர்ணயிக்கப்பட்டது. மூன்று அடிப்பறக் கோடுகள் கணக்கியலில் பாரம்பரிய அறிக்கைகான கட்டமைப்பு கூடுதலாக சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் செயல்திறன் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு விரிவுபடுத்துகிறது.

1981 ஆம் ஆண்டில், ஃப்ரீர் பிரெக்லி முதன்முதலில் 'சமூக தணிக்கை - கூட்டுறவு பணிக்கான ஒரு மேலாண்மை கருவி ' என்ற கட்டுரையில் மூன்று அடிப்பறக் கோடுகள் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தினார். இந்த கட்டுரையில், ஒரு நிறுவனத்தின் செயல்திறன் அறிக்கையில், நிதித்துறை செயல்பாடு, சமூக வளம் உருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகிய மூன்றையும் அளவீடு செய்து அதன் அடிப்படையில் அறிக்கை செய்ய வேண்டும் என்று அவர் வாதிட்டார். மூன்று அடிப்பறக் கோடுகள் என்ற சொற்றொடரை ஜான் எல்கிங்டன் 1997 ஆம் ஆண்டு வெளியிட்ட Cannibals with Forks என்ற புத்தகத்தில், 21 ஆம் நூற்றாண்டின் வணிகத்தில் மூன்று அடிப்பறக் கோடுகளின் பயன்பாடு குறித்து முழுமையாக வெளிப்படுத்தியிருப்பார். மூன்று அடிப்பறக் கோடுகள் பற்றிய கொள்கைகளை விளம்பரப்படுத்துதலுக்கான குழு 1998 ஆண்டில் ராபர்ட் ஜே. ரூபின்ஸ்டீன் என்பவரால் நிறுவப்பட்டது.

பெருநிறுவனங்கள், தங்கள் முயற்சிகள் குறித்து அறிக்கை அளவீடு செய்ய "பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR)" மூலம் பின்வருமாறு தங்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தலாம்:

  • உயர்-நிலை ஈடுபாடு (தலைமை நிர்வாக அதிகாரி, இயக்குநர்களின் குழு)
  • கொள்கை முதலீடுகள்
  • நிகழ்ச்சிகள்
  • தன்னார்வ தரங்களுக்கு கையொப்பமிடுவது.
  • கோட்பாடுகள் (ஐநா உலகளாவிய உடன்படிக்கை கோட்பாடுகள்)
  • அறிக்கையளித்தல் (உலகளாவிய அறிக்கையின் தொடக்கம்)

மூன்று அடிப்பறக் கோடுகள் தொகு

சமூக சமத்துவம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவை மூன்று அடிப்பறக் கோடுகளில் உள்ளது. இதை குறிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட சொற்றொடர் தான் 3P (people, planet, and profit) மக்கள், பூமி அல்லது கோள் மற்றும் இலாபம்.

மக்கள், சமூகசமத்துவ அடிப்பறக் கோடு தொகு

மக்கள், சமூக சமத்துவம் அல்லது மனித மூலதனம் அடிப்பறப்பு என்பது ஒரு பிராந்தியத்தில் உள்ள நிறுவனம் அதன் வணிகத்தை நடத்துவதற்கு நியாயமான மற்றும் நன்மை பயக்கும் வகையில் அந்தப் பிராந்தியத்தில் உள்ள உழைப்பாளர் மற்றும் சமூகம் ஆகியவற்றுடன் எப்படி நடந்தகொள்கிறது என்பதில் இருக்கிறது.

பூமி, சுற்றுச்சூழல் அடிப்பறக் கோடு தொகு

புவியின் சுற்றுச்சூழல் அடிப்பறம் அல்லது இயற்கை மூலதனம் அடிப்பறம் என்பது நிலையான சுற்றுச்சூழல் நடைமுறைகளை குறிக்கிறது. ஒரு TBL நிறுவனம், இயற்கையான ஒழுங்குமுறைக்கு முடிந்த அளவுக்கோ அல்லது குறைந்தபட்சம் சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் செய்யாமல் அதன் தாக்கத்தை குறைக்க முயற்சிக்கிறது. ஒரு TBL முயற்சியில் அந்த நிறுவனம் தனது சுற்றுச்சூழல் தடங்களை மற்ற காரணிகளுடன் ஒப்பிடுகையில் பின்வருபவற்றில் குறைக்க முயற்சிக்கிறது, ஆற்றல் மற்றும் புதுப்பிக்க இயலாத ஆற்றல் ஆகியவற்றின் நுகர்வு மேலாண்மை மற்றும் உற்பத்தி கழிவுகளை குறைப்பது, ஒரு பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ முறையில் கழிவுகளை வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அந்தக் கழிவுகளில் உள்ள நச்சுகளை குறைத்து வழங்குதல்.

இலாபம், பொருளாதார அடிப்பறக் கோடு தொகு

இலாபம் அல்லது பொருளாதார அடிப்பறப்பு என்பது ஒரு நிறுவனத்தின் அனைத்து முதலீடுகளின் செலவுகளையும், மூலதன செலவுகள் உட்பட கழித்தப் பிறகு, நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பொருளாதார மதிப்பைக் குறிக்கிறது, இது இலாபத்தின் பாரம்பரிய கணக்கியல் வரையறைகளில் இருந்து வேறுபடுகிறது. மூலக் கருத்தியலில், ஒரு நிலையான கட்டமைப்பிற்குள், "லாபம்" என்பது அதனை உருவாக்கும் சமுதாயம் அனுபவிக்கும் உண்மையான பொருளாதார நன்மைகளாக காணப்பட வேண்டும்.

மேற்கோள்கள் தொகு

  1. Slaper, Timothy F. and Hall, Tanya J. (2011). "The Triple Bottom Line: What Is It and How Does It Work?" Indiana Business Review. Spring 2011, Volume 86, No. 1.
  2. Elkington, J. (2018), "25 Years Ago I Coined the Phrase "Triple Bottom Line." Here's Why It's Time to Rethink It", Harvard Business Review, 25 June 2018
  3. "Triple Bottom Line". The Economist. November 17, 2009. http://www.economist.com/node/14301663. பார்த்த நாள்: 14 August 2014. 
  4. Sustainability – From Principle To Practice Goethe-Institut, March 2008.
  5. Enhancing the role of industry through for example, private-public partnerships பரணிடப்பட்டது 2012-11-12 at the வந்தவழி இயந்திரம், May 2011. United Nations Environment Programme
  6. Barkemeyer, Ralf; Figge, Frank; Hahn, Tobias; Holt, Diane L. (March 2009). "What the Papers Say: Trends in Sustainability. A Comparative Analysis of 115 Leading National Newspapers Worldwide (PDF Download Available)". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-05-31. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)