மூன்று நஞ்சுகள்

மூன்று நஞ்சுகள், மோகம் (மாயை, குழப்பம்), இராகம் (பேராசை) மற்றும் துவேஷம் (வெறுப்பு) இம்மூன்றும் ஒரு மனிதனின் உள்ளார்ந்த மூன்று துன்பங்கள் அல்லது குணநலன் குறைபாடுகளாகக் கருதப்படுகின்றது. இதனால் விளையும் துக்கம் (துன்பம், வலி, திருப்தியற்ற தன்மை) மறுபிறப்புகளுக்குக் காரணமாகிறது.[1][2]

பவசக்கரத்தின் மையத்தில் மூன்று நஞ்சுகளை உருவகப்படுத்தும் பன்றி, பறவை மற்றும் பாம்பு

திபெத்திய பௌத்த பவசக்கர கலைப்படைப்பின் மையத்தில் மூன்று நஞ்சுகளுக்கு குறியீடாக, சேவல், பாம்பு மற்றும் பன்றி ஆகியவை வரையப்பட்டுள்ளது. இவைகள் முறையே பேராசை, கெட்ட எண்ணம் மற்றும் மாயை ஆகியவற்றைக் குறிக்கின்றது.[3][4]

சுருக்கமான விளக்கம்

தொகு

பௌத்தம் மத போதனைகளில், மூன்று நஞ்சுகள் அறியாமை (பற்றுதல் மற்றும் வெறுப்பு) உணர்வுள்ள உயிரினங்களை வாழ்க்கைச் சுழற்ச்சியில் சிக்க வைக்கும் முதன்மையான காரணங்களாகும். இந்த மூன்று நஞ்சுகள் மற்ற அனைத்து கிலேசங்களுக்கு[5] வேர் என்று கூறப்படுகிறது.[6][7] இந்த மூன்று நஞ்சுகள் வாழ்க்கைச் சக்கரத்தின் மையத்தில் ஒரு பன்றி, ஒரு பறவை மற்றும் ஒரு பாம்பு (முறையே அறியாமை, பற்றுதல் மற்றும் வெறுப்பு ஆகியவற்றைக் குறிக்கும்) குறிப்பிடப்படுகின்றது. இந்து சமயத்தில் வாழ்க்கைச் சக்கரத்தில் மூன்று நஞ்சுகள் கர்மாவின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும், இது சம்சாரத்தின் ஆறு மண்டலங்களில் மறுபிறப்புக்கு வழிவகுக்கிறது.[1][8][9]

எதிர் ஆரோக்கியமான குணங்கள்

தொகு

மூன்று நல்ல மனக்காரணிகள் மூன்று நஞ்சுகளை முறிப்பவைகளாக அடையாளம் காணப்படுகிறது:[10][11]

அமோகா (மாயை அல்லாத) அல்லது ஞானம் அலோபா (பற்று இல்லாதது) அல்லது தாராள மனப்பான்மை அத்துவேஷம் (வெறுக்காதது) அல்லது அன்பு-இரக்கம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Robert E. Buswell Jr.; Donald S. Lopez Jr. (2013). The Princeton Dictionary of Buddhism. Princeton University Press. pp. 546, 59, 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4008-4805-8.
  2. Damien Keown (2004). A Dictionary of Buddhism. Oxford University Press. pp. 8, 47, 89, 106, 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-157917-2.
  3. David Loy (2003). The Great Awakening: A Buddhist Social Theory. Simon and Schuster. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86171-366-0.
  4. Guido Freddi (2019). Bhavacakra and Mindfulness. https://www.academia.edu/40938931. 
  5. கிலேசம்
  6. Daniel Goleman (2003), pages 106, 111
  7. Khenchen Konchog Gyaltshen (2010), p. 451.
  8. David Webster (2005). The Philosophy of Desire in the Buddhist Pali Canon. Routledge. pp. 100–105, 177, 236. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-34652-8.
  9. Dalai Lama (1992), p. 4, 42
  10. Gethin 1998, ப. 81.
  11. Steven M. Emmanuel (2015). A Companion to Buddhist Philosophy. John Wiley & Sons. pp. 435–436. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-119-14466-3.

ஆதாரங்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்று_நஞ்சுகள்&oldid=4109801" இலிருந்து மீள்விக்கப்பட்டது