மூர்கோத் குமரன்

இந்திய எழுத்தாளர் மற்றும் ஆசிரியர்

மூர்கோத் குமரன் (Moorkoth Kumaran) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியும் ஆசிரியரும் ஆவார். மலையாளத்தில் ஒரு முக்கிய சிறுகதை எழுத்தாளராகக் கருதப்படுகிறார்.[1] இவர் வாழ்ந்த காலம் 1874 ஆம் ஆண்டு முதல் 1941 ஆம் ஆண்டு வரையுள்ள காலமாகும்.[2]

மூர்கோத் குமரன்
Moorkoth Kumaran
மூர்கோத் குமரன்
பிறப்பு1874
தலச்சேரி, மலபார் மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் கண்ணூர், கேரளம், இந்தியா)
இறப்பு1941
தலச்சேரி
பணிஎழுத்தாளர்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியைச் சேர்ந்த பணக்கார தியா குடும்பத்தில் இருந்து குமரன் தோன்றினார். நாராயண குருவின் சீடரான இவர், தன்னுடைய குருவின் முதல் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அவர் உயிருடன் இருந்தபோது கேரளாவில் நாராயண குருவின் முதல் சிலையையும் நிறுவத் தொடங்கினார்.[3][4]

வாழ்க்கைக் குறிப்பு தொகு

மூர்கோத்து குமரன் வட மலபாரின் புகழ்பெற்ற பிரபுத்துவ குடும்பத்தில் 1874 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதியன்று பிறந்தார். அப்பா - மூர்கோத் ராமுண்ணி, அம்மா - பரப்புறத்து குஞ்சிறுதா என்பவர்களாவர். தாயார் இவருக்கு ஆறு வயதாக இருந்தபோது இறந்தார். தந்தை எட்டு வயதாக இருந்தபோது இறந்தார். குமரன் தன்னுடைய தந்தையின் குடும்பத்தில் வளர்ந்தார். தலச்சேரியிலும் சென்னையிலும் கல்வி கற்றார். குமரன் "மாடரேட்" என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை தொடங்கி வெளியிட்டார். சிறுகதை எழுத்தாளராகவும் விமர்சகராகவும் அறியப்பட்ட்டார். பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1941 ஆம் ஆண்டு சூன் மாதம் 25 அன்று இறந்தார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Malayalam Literary Survey". 1991.
  2. "Disciples of Narayan Guru". Archived from the original on 28 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2011-09-26.
  3. Guru, Narayana; Karunakaran, Raman (1983). "Darśanamālā of Sri Narayana Guru".
  4. "Archived copy". Archived from the original on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-07-19.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. Folk-lore. 1988. https://books.google.com/books?id=mcjjAAAAMAAJ&q=moorkoth+kumaran. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூர்கோத்_குமரன்&oldid=3603301" இலிருந்து மீள்விக்கப்பட்டது