மூவாற்றுபுழா சட்டமன்றத் தொகுதி

கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

மூவாட்டுபுழா மாநில சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Muvattupuzha State Assembly constituency, மலையாளம்: മൂവാറ്റുപുഴ നിയമസഭാമണ്ഡലം) கேரள மாநிலத்திலுள்ள 140 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும், இடுக்கி மக்களவைத் தொகுதியிலுள்ள 7 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். [1] 2021 சட்டமன்றத் தேர்தலின்படி, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரசின் மேத்யூ குழல்நாடன் ஆவார்.

உள்ளூராட்சி பிரிவுகள்

தொகு

மூவாட்டுபுழா நியாமசபை தொகுதியின் உள்ளூராட்சி பிரிவுகளை பின்வரும் பட்டியல் கொண்டுள்ளது: [2]

எண். பெயர் நிலை (கிராம பஞ்சாயத்து/ நகராட்சி) வட்டம்
1 மூவாட்டுப்புழை நகராட்சி மூவாட்டுப்புழை
2 அரக்குழை கிராம பஞ்சாயத்து மூவாட்டுப்புழை
3 ஆவோலி கிராம பஞ்சாயத்து மூவாட்டுப்புழை
4 ஆயவனை கிராம பஞ்சாயத்து மூவாட்டுப்புழை
5 கல்லூர்க்காடு கிராம பஞ்சாயத்து மூவாட்டுப்புழை
6 மஞ்ஞள்ளூர் கிராம பஞ்சாயத்து மூவாட்டுப்புழை
7 மாறாடி கிராம பஞ்சாயத்து மூவாட்டுப்புழை
8 பாயிப்ர கிராம பஞ்சாயத்து மூவாட்டுப்புழை
9 பாலக்குழை கிராம பஞ்சாயத்து மூவாட்டுப்புழை
10 வாளகம் கிராம பஞ்சாயத்து மூவாட்டுப்புழை
11 பைங்ஙோட்டூர் கிராம பஞ்சாயத்து கொத்தமங்கலம்
12 போத்தானிக்காடு கிராம பஞ்சாயத்து கொத்தமங்கலம்

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு

இத்தொகுதியின் கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனைவரும் பின்வருமாறு:

தேர்தல் சட்டமன்றம் உறுப்பினர் கட்சி பதவிக்காலம்
1957 1வது கே. எம். ஜார்ஜ் இந்திய தேசிய காங்கிரசு
1957 – 1960
1960 2வது 1960 - 1965
1967 3வது பி. வி. ஆபிரகாம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1967 – 1970
1970 4வது பெண்ணம்மா இயாக்கோபு சுயேச்சை
1970 – 1977
1977 5வது பி. சி. சோசப் கேரள காங்கிரசு
1977 – 1980
1980 6வது வி. வி. சோசப் கேரள காங்கிரசு
1980 – 1982
1982 7வது 1982 – 1987
1987 8வது ஏ. வி. ஐசக் சுயேச்சை
1987 – 1991
1991 9வது ஜானி நெல்லூர் கேரள காங்கிரசு (ஜேக்கப்)
1991 – 1996
1996 10வது 1996 - 2001
2001 11வது 2001 - 2006
2006 12வது பாபு பால் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2006 - 2011
2011 13வது சோசப் வாழக்கன் இந்திய தேசிய காங்கிரசு
2011 - 2016
2016 14வது எல்டோ ஆபிரகாம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2016 - 2021
2021 15வது மேத்யூ குழல்நாடன் இந்திய தேசிய காங்கிரசு
பதவியில்

தேர்தல் முடிவுகள்

தொகு

(±%) என்பது முந்தைய தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது.

2021 கேரள சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் 1,91,116 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர்.[3]

கேரள சட்டமன்றத் தேர்தல், 2021 : மூவாற்றுபுழா சட்டமன்றத் தொகுதி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு மேத்யூ குழல்நாடன் 74,425 44.63  1.93
இபொக எல்டோ ஆபிரகாம் 68,264 40.36 8.91
டுவென்டி20 கிழக்கம்பலம் வழக்கறிஞர். சி. என். பிரகாஷ் 13,535 9.38 புதிய
பா.ஜ.க ஜிஜி ஜோசப் 7,527 5.21 1.63
நோட்டா 427 0.3 N/A
வெற்றி விளிம்பு 6961 4.27 2.3
பதிவான வாக்குகள் 1,44,354 75.53 4.62
காங்கிரசு gain from இபொக மாற்றம்  1.93

சான்றுகள்

தொகு
  1. "State Assembly Constituencies in Ernakulam district, Kerala".
  2. "State Assembly constituencies in Ernakulam district, Kerala". www.ceo.kerala.gov.in.
  3. "ceo.kerala.gov.in" (PDF).