மெகக் குல்

பாக்கித்தானிய சதுரங்க வீராங்கனை

மெகக் குல் (Mehak Gul) என்பவர் பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீராங்கனையாவார். 2000 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். 42 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் பெண் வேட்பாளர் மாசுட்டர் (டபிள்யூ. சி. எம்.) என்ற பிடே பட்டத்தை இவர் பெற்றார். [1] இந்த பட்டத்தை வென்ற இளைய பாக்கித்தானியர் மெகக் குல் ஆவார் நாற்பத்தைந்து வினாடிகளில் சதுரங்கப் பலகையில் சதுரங்க காய்களை அடுக்கிய உலக சாதனையையும் இவர் வைத்திருக்கிறார்.

மெகக் குல்
Mehak Gul
நாடுபாக்கித்தான்
பிறப்பு2000 (அகவை 23–24)
லாகூர், பஞ்சாப், பாக்கித்தான்
பட்டம்பெண் வேட்பாளர் மாசுட்டர், (2020)
உச்சத் தரவுகோள்1580 (அக்டோபர் 2016)

தொழில்முறை சதுரங்கம்

தொகு

ஆறு வயதில் மெகக் குல் சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்டார். [2] 2012 ஆம் ஆண்டில் பஞ்சாப் சதுரங்க வெற்றியாளர் மற்றும் தேசிய சதுரங்க வெற்றியாளர் போட்டிகளில் முறையே மூன்றாவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். [2][3] தந்தையால் சதுரங்கம் பயிற்றுவிக்கப்பட்ட இவர் தனது பன்னிரண்டாவது வயதில் பன்னாட்டு அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்றார். இசுத்தான்புல் நகரில் நடைபெற்ற 40 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் இவர் பாக்கித்தானை பிரதிநிதித்துவப்படுத்தினார். அசர்பைசானின் பாகு நகரத்தில் நடைபெற்ற 42 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் பங்கேற்றார். [4] தான் விளையாடிய பதினொரு போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்றார், மேலும் இவருக்கு பெண் வேட்பாளர் மாசுட்டர் என்று பட்டம் வழங்கி பெயரிடப்பட்டது. [5] 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற லிட்டில் மாசுட்டர் சதுரங்கப் போட்டியில் தனது பள்ளியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இவர் மூன்றாவது இடத்தைப் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகக்_குல்&oldid=3907336" இலிருந்து மீள்விக்கப்பட்டது