42 வது சதுரங்க ஒலிம்பியாடு
42 வது சதுரங்க ஒலிம்பியாடு (42nd Chess Olympiad) 2016 ஆம் ஆண்டில் அசர்பைசான் நாட்டின் தலைநகரமும் துறைமுகமுமான பக்கூவில் நடைபெற உள்ளது. பிடே இப்போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்துகிறது.[1] பல்காரியாவில் உள்ள அல்பேனா மற்றும் எசுத்தோனியாவில் உள்ள தாலின் நகரங்களும் இப்போட்டியை நடத்துகின்ற ஆர்வத்தில் ஏலத்தில் பங்கேற்றன. ஆனால் இரண்டு நகரங்களுமே வாக்களிப்பிற்கு முன்பாக முன்னிலைப்படுத்தாத காரணத்தால் அவற்றுக்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை.
42 வது சதுரங்க ஒலிம்பியாடு | |
---|---|
நாட்கள் | 17 செப்டம்பர் 2016 முதல் 30 செப்டம்பர் 2016 வரை |
போட்டியாளர்கள் | |
அணிகள் | |
நாடுகள் | |
போட்டி நடக்குமிடம் | பக்கூ சதுரங்கக் கழகம் |
அமைவிடம் | பக்கூ, அசர்பைசான் |
ஆர்மீனியா நாட்டின் பிரதிநிதிகள் தங்கள் நாட்டு சதுரங்க வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்பது சாத்தியமற்றது என்று அறிவித்துள்ளனர்.[2] மூன்று முறை சதுரங்க ஒலிம்பியாடை வெற்றி கொண்ட அவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினாலும், 2016 போட்டிகளை நடத்த மற்ற நாடுகள் ஏதும் விருப்பம் தெரிவிக்காத காரணத்தால் பக்கூ நகரம் இவ்வாய்ப்பை ஏற்றுக் கொண்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chess Olympiad 2016 in Baku". Chessdom. 2012-09-08. Archived from the original on 2014-07-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ Atarov, Evgeny (September 2012). "Baku to host the 2016 Olympiad". Whychess.com. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)