மெகருன்னிசா பர்வேசு

மெகருன்னிசா பர்வேசு என்பவர் இந்தி இலக்கியத்தில் கதை, புதினத்தின் வழி இலக்கியப் பங்களித்துள்ள ஓர் இந்தியப் பெண் எழுத்தாளராவார்.[1]

மெகருன்னிசா பர்வேசு
பிறப்பு1944
இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர்
அறியப்படுவதுஇந்தி இலக்கியம்
சொந்த ஊர்போபால்
வாழ்க்கைத்
துணை
பகீரத் பிரசாத்
விருதுகள்பத்மசிறீ
வலைத்தளம்
தனிப்பட்ட வலைத்தளம்

சுயசரிதை

தொகு

1944 ஆம் ஆண்டில் பிறந்துள்ள இவரது முதல் கதை 1963 ஆம் ஆண்டில் தர்மயுக் எனற இதழில் வெளியிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து இந்தியில் பல்வேறு சிறுகதைகள் மற்றும் நாவல்களையும் எழுதியுள்ளார்.[2]

1967 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அம்மா[3], மற்றும் 1969 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சமாரா[4] ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க இரண்டு இலக்கியப் படைப்புகளாகும். இதைத்தவிர, மேலும் பல சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.[5]

இவரது படைப்புகள் இந்தியாவின் பல்வேறு கல்லூரிகளில் இந்தி இலக்கியத்தைப் பற்றிய கல்வியியல் ஆய்வுகளுக்கு பயன்படுகிறது[6].[7] இந்தி இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக, இந்திய அரசு, 2005 ஆம் ஆண்டில், பத்மசிறீ என்ற நான்காவது உயரிய குடிமக்கள் விருதை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.[8]

ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான திரு பகீரத் பிரசாத்தை மணந்துள்ளார். இவரது கணவர், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ஆட்சிப்பணியில் நுழைந்த முதல் நபர் என்ற பெருமையைக் கொண்டவர். மேலும் மத்திய பிரதேசத்தின் பிந்த் மக்களவைத் தொகுதியிலிருந்து 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இத்தம்பதியினர் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தற்போது வசித்து வருகின்றனர் .[9]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "India: Door-to-door nikaahnama drive". Women Living Under Muslim Laws. 2015. Archived from the original on டிசம்பர் 8, 2015. பார்க்கப்பட்ட நாள் November 30, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Mehrunnisa Parvez (1944-)". Katha. 2015. பார்க்கப்பட்ட நாள் November 30, 2015.
  3. Mehrunnisa Parvez (1997). Amma. Jnana Ganga; Samskarana. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8185829609.
  4. Mehrunnisa Parvez (1999). Samara. Grantha Akadami. p. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8185826721.
  5. "Mehrunissa Pervez Books". Pustak. 2015. Archived from the original on டிசம்பர் 8, 2015. பார்க்கப்பட்ட நாள் November 30, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "மெஹருன்னிசா பர்வேஜ் கதை சாஹித்யத்தில் படலதே ஜீவன் மூல்ய". mgutheses.in. பார்க்கப்பட்ட நாள் 2024-02-19.
  7. Mini, P. (2015). "Mehrunnisa Parvez ke katha sahitya mein badalte jivan mulya". University (Shodh Ganga). http://shodhganga.inflibnet.ac.in/handle/10603/19585. பார்த்த நாள்: November 30, 2015. 
  8. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on October 15, 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
  9. "Congress candidate joins BJP". Telegraph India. 10 March 2014. Archived from the original on 15 March 2014. பார்க்கப்பட்ட நாள் November 30, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகருன்னிசா_பர்வேசு&oldid=4108366" இலிருந்து மீள்விக்கப்பட்டது