மெகர்பூர் மாவட்டம்

வங்காளதேசத்தின் க்ஹுல்ன்னா டிவிசன் மாவட்டம்

மெகர்பூர் மாவட்டம் (Meherpur District) (வங்காள மொழி: মেহেরপুর জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் குல்னா கோட்டத்தில் அமைந்துள்ளது. வங்காளதேசத்தின் மேற்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மெகர்பூர் நகரம் ஆகும்.[1]

வங்காளதேசத்தில் மெகர்பூர் மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள்

தொகு

மெகர்பூர் மாவட்டத்தின் வடக்கில் குஸ்தியா மாவட்டம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலமும், தெற்கில் மேற்கு வங்காள மாநிலமும், சௌதாங்கா மாவட்டமும், கிழக்கில் சௌதாங்கா மாவட்டமும், குஸ்தியா மாவட்டங்களும், மேற்கில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலமும் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

751.62 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக மெகர்பூர், கங்கினி மற்றும் முஜிப்நகர் என மூன்று துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் மெகர்பூர், முஜிப்நகர் என இரண்டு நகராட்சி மன்றங்களையும், பதினெட்டு கிராம ஒன்றியக் குழுக்களையும், 180 வருவாய் கிராமங்களையும், 274 கிராமங்களையும் கொண்டுள்ளது. முப்பத்தி ஐந்து அஞ்சல் நிலையங்களுடன் கூடியது இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 7100 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0791 ஆகும். இம்மாவட்டம் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [2]

பொருளாதாரம்

தொகு

இம்மாவட்டம் வேளாண் பொருளாதாரத்தை நம்பியுள்ளது. இம்மாவட்டத்தில் மதவங்க, வைராப், சௌதியா, கஜ்லா முதலி ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. இங்கு நெல், சணல், மா, கடுகு, வாழை, உருளைக்கிழங்கு, மிளகு, கடுகு, கோதுமை, அன்னாசி முதலியன பயிரிடப்படுகிறது.

மக்கள் தொகையியல்

தொகு

751.62 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 6,55,392 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 3,24,634 ஆகவும், பெண்கள் 3,30,758 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.02 % ஆக உள்ளது. பாலின விகிதம் 98 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 872 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 46.3 % ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி

தொகு

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு

23°45′N 88°42′E / 23.75°N 88.70°E / 23.75; 88.70

  1. Md Abu Hasan Farooque (2012). "Meherpur District". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. Meherpur District
  3. Community Report Meherpur Zila June 2012[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகர்பூர்_மாவட்டம்&oldid=3225561" இலிருந்து மீள்விக்கப்பட்டது