மெக்சிகோ நகர மெற்றோ விபத்து
3 மே 2021, 22:25 மணிக்கு மத்திய நேர வலயம், மெக்சிக்கோ பெருநகர மெட்ரோ தடம் 12ன், டல்ஹீவாக்கில் பயணித்துக்கொண்டிருந்த மெட்ரோ இரயில் மேம்பால உத்தரம் சரிந்து விழுந்ததால் விபத்திற்குள்ளானது. ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் ஒலிவோஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள டல்ஹுவாக் அவென்யூவில் பாலத்துடன் விழுந்தன. இந்த விபத்தில் இருபத்தைந்து பேர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 21 பேர் இறந்தனர்.[1] மேலும் நான்கு பேர் மருத்துவமனைகளில் இறந்ததாக அறிவிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் மெற்றோவின் மிக மோசமான சம்பவம் இதுவாகும்.
விபத்திற்குள்ளான தடம் 12, இந்தப் பிரிவில் உள்ள புதிய வழித்தடமாகும். இது 2012இல் சேவைக்குத் திறக்கப்பட்டது. இதன் தொடக்கத்திலிருந்து, தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்பு சிக்கல்கள் எழுந்தன. இதன் விளைவாக 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் மேல்மட்டப் பிரிவுகளில் ஒரு பகுதி மூடப்பட்டது. இங்கு விபத்து ஏற்பட்டது. 2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு இந்த இடைவெளி சேதமடைந்தது. சில மாதங்களில் சேதம் சரி செய்யப்பட்டது. ஆனால் அருகில் வசிப்பவர்கள் இத்தடத்தில் பிரச்சினைகள் இன்னும் உள்ளன என்று தெரிவித்தனர்.
பின்னணி
தொகுமெற்றோ அமைப்பு
தொகுமெக்சிகோ நகர மெற்றோ, சிஸ்டெமா டி டிரான்ஸ்போர்ட் கோலெக்டிவோ (எஸ்.டி.சி) ஆல் இயக்கப்படுகிறது.[2] இந்த மெற்றோ உலகின் பரபரப்பான மெற்றோவில் ஒன்றாகும். இதில் நாள் ஒன்றிற்கு சுமார் 4.5 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர்[2][3] இது 1969ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. நியூயார்க் நகர சப்வேக்குப் பிறகு தொடங்கப்பட்ட அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய மெற்றோ இதுவாகும்.[4] விபத்துக்கு முன்னர், கணினி இதன் பராமரிப்பு குறித்த பொதுவான கவலைகளுடன் மோசமாவதற்கான எச்சரிக்கை அறிகுறிகளைக் காட்டியது.[5][6]
மார்ச் 2020இல், ஒரு ஓட்டுநர் நெறிமுறைகளைப் பின்பற்றாததாலும், ரயிலின் தடைகள் செயலிழந்ததாலும் டக்குபயா நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதின.[7] ஜனவரி 2021இல், மெற்றோவின் நகரத் தலைமையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் காயமுற்ற 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆறு சுரங்கப்பாதை பாதைகள் பல வாரங்களாகச் சேவையில்லாமல் இருந்தன. ஏப்ரல் மாதம், தடம் 4ல் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு மூடப்பட்டது.[8]
தடம் 12
தொகுமெற்றோ அமைப்பின் புதிய தடம், தடம் 12, தங்கத் தடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மெற்றோ தடமானது குரூபோ ஐசிஏ, ஆல்சுடோம் மெக்சிகானா மற்றும் க்ரூபோ கார்சோவுடன் இணைந்து கட்டமைத்தது.[9] கட்டுமானம் செப்டம்பர் 2008ஆம் ஆண்டு தொடங்கியது. அக்டோபர் 2012இல் பணிகள் நிறைவடைந்ததும், மெக்சிகோ குடியரசுத்தலைவர் பெலீப்பே கால்டெரோன் மற்றும் மெக்சிகோ நகர அரசாங்கத்தின் தலைவரான மார்செலோ எப்ரார்ட் ஆகியோரால் பொதுப் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. இந்தச் சேவையின் தொடக்கத்திலிருந்து, தடம் 12-ல் உயர்த்தப்பட்ட பிரிவுகளில் ரயில்களில் சிக்கல்களை எதிர்கொண்டது. இதனால் இரயில்கள் தடம் புரள்வதைத் தடுக்க வேகத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டது. பதினேழு மாதங்கள் கழித்து, அட்டலில்கோ - டல்ஹுவாக் மார்க்கத்தில் டெடொன்கோ மற்றும் ஒலிவோசு நிலையங்கள் அமைந்துள்ள பிரிவானது 20 மாதங்களுக்குத் தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்பு குறைபாடுகளினால் மூடப்பட்டது.[10]
ஒரு சிறப்பு ஆணையம், மெற்றோ மூடப்பட்ட காரணங்களை விசாரிப்பதற்கும், மூடுவதற்குப் காரணமான பிழைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் யார் எனக் கண்டறிய உருவாக்கப்பட்டது.[11] சுயாதீன ஆலோசனைக் குழு சிஸ்ட்ரா விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. சுமார் 2,900க்கும் மேற்பட்ட ஆவணங்களை மதிப்பாய்வு செய்து தடங்களைச் சோதித்தபின்[12] அந்த தடத்தின் "திட்டமிடல், வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் செயல்பாடு" ஆகியவற்றில் பிழைகள் இருப்பதாகக் குழு முடிவு செய்தது.[13] 2015ஆம் ஆண்டில், கூட்டமைப்பின் உயர் தணிக்கை அலுவலகம் (ஆடிட்டோரியா சுப்பீரியர் டி லா ஃபெடரேசியன் ; ஏஎஸ்எஃப்) கட்டுமானப் பணியின் போது 12 முறைகேடுகள் இருப்பதாக அறிக்கை வழங்கியது. இதில் எப்ஈ-10இன் ரயில் சக்கரங்களுக்கும் தண்டவாளங்களுக்கும் இடையில் பொருந்தாத தன்மைகள் உள்ளன என்றும் இதனால் உறுதியற்ற தன்மை ஏற்படலாம் என்றும் ரயில்களின் செயல்பாடுகள் பாதுகாப்பான ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பிலிருந்தன எனத் தெரிவிக்கப்பட்டது.[14]
2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கத்திற்குப் பிறகு தடம் 12ன் பாதைகள் சேதமடைந்ததால், ஒலிவோஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.[15] ஆனால் பின்னர் அது மீண்டும் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்குத் தற்காலிக முனைய நிலையமாகச் சேவை செய்தது.[16] இப்பகுதியினைச் சார்ந்தவர்கள் கட்டமைப்பில் விரிசல்கள் காணப்படுவதால் விபத்து நிகழ வாய்ப்புள்ளதாக 2017இல் தெரிவித்தனர். [17] இந்த புகார்களைத் தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் பழுது பார்த்தனர். ஒலிவோசு மற்றும் நோபலேரா நிலையங்களுக்கு இடையிலான பால தூண் ஒன்று விரிசல்களைக் காட்டியது. இதனை உடனடியாக போக்குவரத்து அதிகாரிகளால் ஜனவரி 2018க்குள் சரிசெய்யப்பட்டது.[18] எவ்வாறாயினும், 2020 மெக்சிக்கோவில் கொரோனாவைரசுத் தொற்று முன்னர், இப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன், இந்த நீட்டிப்பு தூரமானது செங்குத்தாகவும், உத்தரங்கள் வளைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.[19]
முறிவு
தொகு3 மே 2021 22:25 மணிக்கு (ம.நே.வ.), பெருநகரின் டல்ஹுவாக்,[20][21] கிழக்கு நோக்கிய ஒலிவோசு- டெசோன்கோ இடையே மேம்பாலம் மீது சென்றுகண்டிருந்தது.[22] ஒலிவோசு நிலையத்தை அடைவதற்கு 200 மீட்டர் தூரத்திற்கு முன்பு,[23] தடங்களைச் தாங்கிக்கொண்டிருந்த உத்தரம் சரிந்ததால்.[24][25] ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகளும் விபத்திற்குள்ளானது.[26][27][28] பாலத்தின் இடிந்து விழுந்த துண்டு ட்லூவாக் வாயிலில் பயணித்த தானியங்கி மீது விழுந்தது. இதில் அந்த தானியங்கியின் ஓட்டுநர் கொல்லப்பட்டார். அவரது மனைவி காயமடைந்தார்.[29] கடந்து செல்லும் இந்த உயர்மட்ட பாதையானது தரையிலிருந்து 5 மீட்டர்கள் (16 அடி) உயரத்தில் கான்கிரீட் மையத் துண்டுக்கு மேலே அமைந்திருந்தது. இதனால் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளிடையே உயிரிழப்பு குறைந்தது.[20]
இந்த விபத்தில் இருபத்தைந்து பேர் இறந்தனர், மேலும் 70 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 65 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஏழு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.[20][30][31] இந்த விபத்தில் இறந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர். 1975ஆம் ஆண்டில் இரண்டு ரயில்களுக்கு இடையே மோதியதில் 31 பேர் கொல்லப்பட்ட மெற்றோவின் விபத்திற்குப் பின் நடைபெறும் மிக மோசமான சம்பவம் இதுவாகும்.[32]
மீட்பு முயற்சிகள்
தொகுவிபத்திற்குப் பின், அருகிலிருந்தோர் உடனடியாக மீட்பு முயற்சிகளைத் தொடங்கினர்.[19][33] பின்னர் தகவலறிந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணியினைத் தொடர்ந்தனர்.[34] சில மணிநேரங்களுக்குப் பிறகு, கட்டமைப்பு நிலையற்றதாக இருந்ததால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.[35] இடிபாடுகளில் சிக்கி உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கப் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் ரயில் பாதையின் பிரிவுகளை உயர்த்துவதற்காக ஒரு சுமைதூக்கியினை பயன்படுத்தி பணியாற்றின.
பின்விளைவு
தொகுதடம் 12 முழுவதிலும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டு பேருந்து சேவைக்கு மாற்றப்பட்டன.[36] எஸ்.டி.சி குடியிருப்பாளர்களை இப்பகுதியைத் தவிர்க்குமாறு எச்சரித்தது.[37]
மெக்சிகோ மாநகரத் தந்தை கிளாடியா ஷெய்ன்பாம், ஒரு சர்வதேச நிறுவனம் விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையில் ஈடுபடும் என்று கூறினார்.[38] ரயில் தடம் பயணத்திற்குத் தடை செய்யப்பட்டுக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்றார். மத்திய அரசு மூன்று நாட்கள் தேசியத் துக்கத்தை அறிவித்தது. மெக்சிகோ மெற்றோ தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், 8,000 தொழிலாளர்கள் தங்கள் பணிக்கு போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.[39]
எதிர்ப்பு
தொகுஅடுத்த நாள், எதிர்ப்பாளர்கள் பல நிலையங்களை அழித்தனர், கண்ணாடி மேடை பகிர்வுகளை உடைத்து, நிலைய சுவர்களில் "இது ஒரு விபத்து அல்ல - இது அலட்சியம்" போன்ற முழக்கங்களை எழுப்பினர்.[40] ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரிஃபெரிகோ ஓரியண்டே நிலையத்திலிருந்து விபத்து நடந்த இடத்திற்கு "இது ஒரு விபத்து அல்ல, பொறுப்பானவர்களுக்கு முதல் மற்றும் கடைசி பெயர்கள் உள்ளன" மற்றும் "ஊழல் பலி, இறந்தவர்கள் எப்போதும் மக்கள்" என்று பதாகைகளுடன் அணிவகுத்துச் சென்றனர்.[41]
மேற்கோள்கள்
தொகு- ↑ Olvera, Dulce (4 May 2021). "El conductor del tren de la L12 está hospitalizado. Trabajadores exigen revisar todo el Metro" [The driver of the L12 train is hospitalized. Workers demand to overhaul the entire Metro]. SinEmbargo (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 5 May 2021.
- ↑ 2.0 2.1 Gómez Flores, Laura Cecilia (4 May 2021). "Ya son 25 muertos por el desplome del Metro" [There are already 25 deaths due to the collapse of the Metro]. La Jornada (in ஸ்பானிஷ்). Mexico City. பார்க்கப்பட்ட நாள் 5 May 2021.
- ↑ "Afluencia de estación por línea 2019" [Station traffic per line 2019] (in ஸ்பானிஷ்). Sistema de Transporte Colectivo Metro. 2020. Archived from the original on 8 April 2020. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Mexico City Rapid Transit Metro, Mexico - Railway Technology". Railway Technology. பார்க்கப்பட்ட நாள் 5 May 2021.
- ↑ "Mexico City's metro has been plagued by problems". https://www.nytimes.com/live/2021/05/04/world/mexico-train-metro-crash/mexico-citys-metro-has-been-plagued-by-problems.
- ↑ "Anger mounts as death toll from Mexico metro overpass collapse rises to 24". https://www.theguardian.com/world/2021/may/04/mexico-train-collapse-death-toll-anger.
- ↑ Navarro, Israel; Alzaga, Ignacio (1 April 2021). "Choque del Metro Tacubaya, por falla humana; enjuiciarán a dos" [Tacubaya station crash caused by human error; two to be prosecuted]. Milenio (in ஸ்பானிஷ்). Mexico City.
- ↑ Pantoja, Sara (23 April 2021). "Incendio deja sin servicio "hasta nuevo aviso" la Línea 4 del Metro" [Fire leaves Metro Line 4 without service "until further notice"]. Proceso (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 5 May 2021.
- ↑ "¿Quién construyó la línea 12 del Metro?" [Who built Line 12?]. Expansión (in ஸ்பானிஷ்). 11 March 2014. Archived from the original on 2 July 2020. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ Rodea, Felipe (29 November 2015). "Mancera reabre Línea 12 del Metro" [Mancera reopens Metro's Line 12]. El Financiero (in ஸ்பானிஷ்). Archived from the original on 4 July 2020. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
- ↑ Ramírez, Kenya (18 March 2014). "Lista la Comisión Investigadora de la Línea 12 en la ALDF" [Line 12 Investigation Commission in the ALDF is ready]. Excélsior (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Línea 12 del Metro falló en diseño y construcción" [Metro Line 12 failed in design and construction]. Forbes (in ஸ்பானிஷ்). 5 September 2014. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Cronología y fechas clave en la Línea 12 del Metro" [Chronology and key dates on Metro Line 12]. El Universal (in ஸ்பானிஷ்). Mexico City. 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ González, Isabella (4 May 2021). "Las irregularidades de la Línea 12" [Line 12 irregularities]. LatinUS. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ Hernández, Eduardo (21 September 2017). "Vecinos temen colapso de Línea 12 del Metro por sismo" [Neighbors fear collapse of Metro Line 12 due to earthquake]. El Universal (in ஸ்பானிஷ்). Mexico City. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Metro reabre tramo dañado de Línea 12" [Metro reopens the damaged section of Line 12]. El Heraldo de México (in ஸ்பானிஷ்). 30 October 2017. Archived from the original on 3 March 2018. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Vecinos temían colapso de la Línea 12, según video de El Universal de 2017" [Neighbors feared Line 12 collapse, according to a El Universal video from 2017]. Aristegui Noticias (in ஸ்பானிஷ்). 3 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Vecinos de la Línea 12 alertaron por grietas... en 2017" [Line 12 neighbors warned about cracks... in 2017]. Chilango (in ஸ்பானிஷ்). 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ 19.0 19.1 Fuentes, David (4 May 2021). "Otra vez brota la solidaridad de extraños por accidente en Línea 12 del Metro" [Once again, solidarity from strangers in the aftermath of the accident on Metro Line 12]. El Universal. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ 20.0 20.1 20.2 Sánchez, Fabiola (4 May 2021). "Overpass collapse on Mexico City metro kills at least 24". Associated Press. https://apnews.com/article/mexico-city-mexico-faee07a9250174f58365db6c915476d7.
- ↑ Suarez, Karol; Paget, Sharif; Westcott, Ben (4 May 2021). "Mexico City subway overpass collapses, killing at least 23 and injuring dozens". CNN. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Tragedia en el Metro". Telediario. Multimedios Televisión. XHTDMX-TDT. Event occurs at 15:00 CDT.
- ↑ "Qué provocó la tragedia en la Línea 12: estas serían las causas del desplome de un tramo del Metro de la CDMX" [What caused the tragedy on Line 12: these could be the causes of the collapse of a section of the CDMX subway system]. Infobae (in ஸ்பானிஷ்). 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ Harrup, Anthony; Montes, Juan (4 May 2021). "Mexico City Subway Collapse Kills at Least 24, Injures Dozens More". The Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் 5 May 2021.
- ↑ "Mexico City metro overpass collapse kills at least 23 people, injures dozens". CBS News. Mexico City. 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 5 May 2021.
- ↑ Sheridan, Mary Beth (4 May 2021). "Mexico City subway overpass collapses; at least 13 dead as metro cars topple". The Washington Post. https://www.washingtonpost.com/world/2021/05/04/mexico-city-metro-train-platform-collapse/.
- ↑ Ives, Mike (4 May 2021). "Subway Train Derails in Mexico City, Killing at Least 13". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2021/05/04/world/americas/mexico-city-train-derailment.html.
- ↑ "Puente del Metro cae en estaciones Olivos y Tezonco de la Línea 12" [Metro bridge falls at Olivos and Tezonco stations of Line 12]. Milenio (in ஸ்பானிஷ்). 3 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ Nila, Gabriela (4 May 2021). "Confirman muerte de conductor de coche aplastado por desplome de metro Olivos; viajaba con su esposa" [Confirmed death of driver of the crushed car by Olivos subway collapse; he was traveling with his wife]. Noticieros Televisa (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Mexico City rail overpass collapses, killing 20 people". Reuters. 4 May 2021. https://www.reuters.com/world/americas/mexico-city-metro-overpass-collapses-with-train-cars-2021-05-04/.
- ↑ "Colapsa estructura en la Línea 12 del Metro; se registran seis muertos" [Structure collapses on Metro Line 12; six dead are registered]. Energía Hoy (in ஸ்பானிஷ்). 3 May 2021. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
- ↑ McDonnell, Patrick J. (4 May 2021). "In Mexico, a deadly train wreck that many saw coming". Los Angeles Times. https://www.latimes.com/world-nation/story/2021-05-03/mexico-city-metro-overpass-collapses-onto-road-13-dead.
- ↑ "Puente se desploma con todo y tren del Metro en estación Olivos de la L12, en la CDMX" [Bridge collapses with a Metro train at Olivos station of L12, in Mexico City]. Diario de Colima (in ஸ்பானிஷ்). 3 May 2021.
- ↑ "Survivors Helped From Wreckage After Deadly Mexico City Overpass Collapse". Yahoo!. 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Claudia Sheinbaum informa suspensión en maniobras de rescate; 'estructura está muy débil'" [Claudia Sheinbaum reports suspension of rescue maneuvers; 'structure is too weak']. El Heraldo de México (in ஸ்பானிஷ்). 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Cierran toda la Línea 12 del Metro; RTP brindará servicio de apoyo" [All Metro Line 12 is closed; RTP will provide back-up service]. Chilango (in ஸ்பானிஷ்). 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "What We Know About the Mexico City Train Crash". https://www.nytimes.com/2021/05/04/world/americas/mexico-city-train-derailment.html.
- ↑ "CDMX busca agencia internacional para peritaje por desplome en L-12 del Metro" [CDMX seeks international agency for Metro L-12 collapse expertise]. Once Noticias (in ஸ்பானிஷ்). 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Trabajadores del Metro anuncian paro de labores en las 12 Líneas, tras colapso en Olivos" [Metro workers announce strike on all 12 lines after Olivos collapse]. El Gráfico (in ஸ்பானிஷ்). Mexico City. 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Feministas y encapuchados protestan por accidente en el Metro CDMX" [Feminists and hooded demonstrator protest accident in the CDMX Metro]. Azteca Noticias (in ஸ்பானிஷ்). 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ Quintero M., Josefina (4 May 2021). "Con marcha exigen castigo a responsables de accidente en L12" [March to demand punishment of those responsible for L12 accident]. La Jornada (in ஸ்பானிஷ்). Mexico City. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.