2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம்
2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம் (2017 Central Mexico earthquake) 2017 செப்டம்பர் 19 அன்று பிற்பகல் 13:14 நநேவ (18:14 ஒசநே) 7.1 MW அளவுடன் மெக்சிக்கோவின் புவெப்லா நகரில் இருந்து 55 கிமீ தெற்கே தாக்கியது. ஏறத்தாழ 20 செக்கன்களுக்கு மிகப்பலமான அதிர்வுகள் உணரப்பட்டன. இந்நிலநடுக்கத்தால் மெக்சிக்கோவின் புவெப்லா, மொரேலொசு ஆகிய மாநிலங்களும், மெக்சிக்கோ நகரமும் பாதிப்புக்குள்ளாயின. நாற்பதிற்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன.[1][2][3] மெக்சிக்கோ நிலநடுக்க எச்சரிப்பு மையம் மெக்சிக்கோ நகரில் 20 செக்கன்கள் எச்சரிக்கையை அறிவித்தது. குறைந்தது 230 பேர் உயிரிழந்ததாக இரண்டாம் நாள் செய்திகள் தெரிவித்தன.[4] 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.[5]
மெக்சிக்கோ, புவெப்லாவில் நிலநடுக்க மையம் | |
நாள் | 19 செப்டம்பர் 2017 |
---|---|
தொடக்க நேரம் | 18:14:39 UTC |
கால அளவு | 20 செக்கன்களுக்கு பலமான அதிர்வு |
நிலநடுக்க அளவு | 7.1 (Mw) |
ஆழம் | 51 கிமீ (32 மைல்) |
நிலநடுக்க மையம் | 18°35′02″N 98°23′56″W / 18.584°N 98.399°W |
வகை | இறக்கச் சறுக்கல் (உட்தட்டு) |
அதிகபட்ச செறிவு | VIII (கடுமை)]] |
உயிரிழப்புகள் | குறைந்தது 230 பேர் இறப்பு, 800+ காயம் |
இந்நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன்னர், மெக்சிக்கோவில் 1985 ஆம் ஆண்டு நிலநடுக்க அழிவுகள் நினைவுகூரப்பட்டது. 1985 ஆம் ஆண்டில் இதே நாளன்று மெக்சிக்கோவைத் தாக்கிய நிலநடுக்கம் 10,000 இற்கும் அதிகமானோரைக் கொன்றது.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "M 7.1 - 5km ENE of Raboso, Mexico". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 19 September 2017. பார்க்கப்பட்ட நாள் 19 September 2017.
- ↑ Almasy, Steve; Simon, Darran (19-09-2017). "Central Mexico earthquake kills dozens, topples buildings". CNN. http://www.cnn.com/2017/09/19/americas/mexico-earthquake/index.html. பார்த்த நாள்: 19-09-2017.
- ↑ "Mueren 4 tras sismo; caen 29 edificios [4 die in earthquake after 29 buildings fall]" (in Spanish). Reforma. 19-09-2017. http://www.reforma.com/aplicaciones/articulo/default.aspx?id=1213712&v=5. பார்த்த நாள்: 19-09-2017.
- ↑ "Suman 230 muertos por sismo, confirma Protección Civil [230 killed by quake, Civil Protection confirms]" (in es) இம் மூலத்தில் இருந்து 2017-09-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170921021712/http://www.informador.com.mx/mexico/2017/740210/3/suman-230-muertos-por-sismo-confirma-proteccion-civil.htm.
- ↑ "Saldo del sismo en la CDMX: 94 muertos, más de 800 lesionados y 214 desaparecidos [Mexico City earthquake claims 94 lives, more than 200 injured and 214 missing]" (in es) இம் மூலத்தில் இருந்து 2017-09-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170921000518/https://www.elsoldelcentro.com.mx/metropoli/cdmx/saldo-del-sismo-en-la-cdmx-86-muertos-mas-de-700-lesionados-y-214-desaparecidos.
- ↑ "Powerful Earthquake Shakes Mexico On 32nd Anniversary Of Deadly Temblor". NPR. 19-09-2017. http://www.npr.org/sections/thetwo-way/2017/09/19/552141609/powerful-earthquake-shakes-mexico-on-32nd-anniversary-of-deadly-temblor. பார்த்த நாள்: 19-09-2017.
- ↑ "Starkes Erdbeben erschüttert Mexiko" (in de). Tagesschau. 19 September 2017. http://www.tagesschau.de/ausland/erdbeben-mexiko-105.html. பார்த்த நாள்: 19-09-2017.
வெளி இணைப்புகள்
தொகு- Why Mexico City is so vulnerable to earthquakes – CNN
- A Shock WIthout Aftershocks – Berkeley Seismological Laboratory