மெடூசா (Medusa) என்பவள் கிரேக்கத் தொன்மத்தில் வரும் ஓர் அழகி பின் நாட்களில் அரக்கியாக மாறியவள் ஆவாள். இவள் மிகவும் அழகாக இருந்ததால் பல ஆண்கள் இவளை வட்டமடித்து வந்தனர். அந்த அழகு அவளுக்கு ஆபத்தாகவும் மாறியது. அதீனா என்னும் கடவுளுக்கு இவள் அழகின் மேல் பொறாமை ஏற்பட்டது. போஸிடான் என்ற கடல் அரசனுக்கு இவள் மேல் காதல் ஏற்பட்டது. அதனை அவள் ஒத்துக்கொள்ளததால் அவளை வலுக்கட்டாயமாக அதீனா அவர்களின் கோவிலிலே புணர்ந்தான். கோவிலில் இது போன்று நடந்ததால் அதீனா கோவமுற்றார், தன் கர்ப்பைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நீ என் சிஷ்யாக இருக்க முடியாது என்றும், என் கோவிலயே அசுத்தம் செய்து விட்டாய் என்றும் கூறி சாபம் மூலமாக அவள் அழகை எல்லாம் பறிக்கின்றார். இவள் யாரையேனும் பார்த்தால் பார்த்தவர்கள் கல்லாகி விடுவர். வெண்கலக்கையும் நச்சுப்பல்லும் உடைய இவளுடைய தலையில் முடிகளுக்குப் பதில் பாம்புகள் இருக்கும். இவள் போர்க்கிஸ் மற்றும் கெடோவின் பிள்ளை ஆவாள்.[1] இவள் சக்தி வாய்ந்தவளும் மிகவும் பலம்பொருந்தியவளும் ஆவாள்.[2] [3] இவள் பேர்சியஸ் என்பவனால் கொல்லப்படுகின்றாள்.

அர்னால்டு பாக்ளின் வரைந்த‌ மெடுசாவின் ஓவியம்

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "She was the daughter of Phorcys, a God of the sea, and Ceto, a female sea God". பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Kottke, Amanda. "The Gorgons". arthistory.sbc.edu. Archived from the original on டிசம்பர் 9, 2004. பார்க்கப்பட்ட நாள் May 27, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Medusa was a monster in Greek mythology, known as a Gorgon. She had the face of a hideous woman, but had poisonous snakes on her head, instead of hair". பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெடூசா&oldid=3568443" இலிருந்து மீள்விக்கப்பட்டது