மெட்டா-பீனைலீன்டையமீன்

1,3-டையமினோமென்சீன்

மெட்டா-பீனைலீன்டையமீன் (m-Phenylenediamine) என்பது C6H4(NH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை 1,3-டையமினோமென்சீன் என்ற பெயராலும் அழைக்கலாம். நிறமற்ற திண்மமான இச்சேர்மம் ஆர்த்தோ- பீனைலீன்டையமீன், பாரா-பீனைலீன்டையமீன் ஆகிய சேர்மங்களின் மாற்றியமாக கருதப்படுகிறது.

'மெ-பீனைலீன்டையமீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்சீன்-1,3-டையமீன்
வேறு பெயர்கள்
1,3-டையமினோபென்சீன்
மெ.பீ.டை
இனங்காட்டிகள்
108-45-2 Y
ChEBI CHEBI:8092 N
ChemSpider 13836283 N
InChI
  • InChI=1S/C6H8N2/c7-5-2-1-3-6(8)4-5/h1-4H,7-8H2 N
    Key: WZCQRUWWHSTZEM-UHFFFAOYSA-N N
  • InChI=1/C6H8N2/c7-5-2-1-3-6(8)4-5/h1-4H,7-8H2
    Key: WZCQRUWWHSTZEM-UHFFFAOYAM
யேமல் -3D படிமங்கள் Image
  • c1cc(cc(c1)N)N
UNII OE624J2447 Y
பண்புகள்
C6H8N2
வாய்ப்பாட்டு எடை 108.1
தோற்றம் வெண்மை நிறத் திண்மம்
உருகுநிலை 64 முதல் 66 °C (147 முதல் 151 °F; 337 முதல் 339 K)
கொதிநிலை 282 முதல் 284 °C (540 முதல் 543 °F; 555 முதல் 557 K)
42.9 கி/100 மி.லி (20 °செல்சியசில்)
-70.53•10−6செ.மீ3/மோல்
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R23/24/25 R36/37/38 R40 R42/43
S-சொற்றொடர்கள் S22 S26 S36 S37 S39 S45
Autoignition
temperature
560 °C (1,040 °F; 833 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

1,3-டைநைட்ரோபென்சீனை ஐதரசனேற்றம் செய்து மெட்டா-பீனைலீன்டையமீன் தயாரிக்கப்படுகிறது. பென்சீனை டைநைட்ரசனேற்றம் செய்து டைநைட்ரோபென்சீனை தயாரித்துக் கொள்ளலாம் [1].

பயன்கள்

தொகு

அராமிட் இழைகள், எப்பாக்சி பிசின்கள், பல்யூரியா மீள்பொருட்கள், கம்பி மிளிர் பூச்சுகள், தோல் மற்றும் நெசவுத் துணிகளுக்கான சாயங்கள் உள்ளிட்ட பல பலபடிகளைத் தயாரிக்க மெட்டா-பீனைலீன்டையமீன் பயன்படுகிறது. பிசுமார்க் பழுப்பு எனப்படும் அடிப்படை பழுப்பு நிற முடுக்கியாகவும், நெசவுத் துணிகள் மற்றும் தோல்களுக்கான சாயங்களான அடிப்படை ஆரஞ்சு 2, நேர் கருப்பு 38 போன்றவற்றின் பகுதிப்பொருளாகவும் மேம்பட்ட கருப்பு பி.எச்.என்ற முடிச்சாயமாகவும் மெட்டா-பீனைலீன்டையமீன் பயன்படுகிறது. நீல வண்ணங்கள் தயாரிப்பில் பிணைப்பு முகவராகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள் [2].

மேற்கோள்கள்

தொகு
  1. Smiley, Robert A. (2000), "Phenylene- and Toluenediamines", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_405, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730
  2. Clausen, Thomas; Schwan-Jonczyk, Annette; Lang, Günther; Schuh, Werner; Liebscher, Klaus Dieter; Springob, Christian; Franzke, Michael; Balzer, Wolfgang; Imhoff, Sonja; Maresch, Gerhard; Bimczok, Rudolf (2006), "Hair Preparations", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a12_571.pub2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டா-பீனைலீன்டையமீன்&oldid=2582838" இலிருந்து மீள்விக்கப்பட்டது